Wednesday, February 22, 2012

விடியலை காணும் கனவுடன்



புகை மூட்டமாக
இருந்த
இனப்போர்
புதைகுழிகளினுள்ளே
புதைக்கப்பட்டது
இருந்தும்
இன்னுமா அதனால்
எஞ்சும் பணத்தை
தொலைக்கிறார்கள்

வெடிகுண்டு கலாச்சாரம்
முடிந்ததாய் சொல்லும்
அரசாங்கம்
மக்கள் மடியில்
விலை குண்டை அல்லவா
சுமத்துகின்றது

தேசத்தை கட்டியெழுப்ப
வெட்டியெடுக்கும்
வெளிநாட்டு
கடன் குழிகள் கூட
நம்மை முண்டியடித்து
மூடிவிடும் போலுள்ளதே

அபிவிருத்தி
என்கின்ற பெயரில்
பாதைகள் ஏதோ
அழகாகின்றது
அதைவிட பன்மடங்கு
வேகத்தில்
பரம்பரைக்கே
சொத்துக்கள்
சேர்க்கப்படுகின்றதே

மக்கள் மாக்களாய்
மடிந்தபின்
இவர்கள் பாதைகளை
அபிவிருத்தி செய்து
என்ன
வேற்றுக்கிரக வாசிகளுக்கு
விற்க போகிறார்களா
இல்லை
சந்திரனிலும் தனக்காக
சொத்து சேர்க்க
பார்க்கிறார்களா

இந்த இருளில்
இருந்தாடியே
முனுமுனுக்கின்றோம்
இருளாய் இருந்தாலும்
பரவாயில்லை
கண்களையும் பரித்துவிடதே
என்றாவது ஒருநாள்
விடியலை காணலாம்
என்கின்ற
கனவுடனேனும்
வாழ்ந்து மடியும் வரை

1 comment:

Raheem Ahmed said...

atputhamana varigal....