Wednesday, February 1, 2012

மொழி



உரையாட
உறவாட
உள்ளங்களில் உயிரோட்டம்
உற்றெடுக்க
ஊடகமாக இருப்பதுவும்
இந்த மொழியே

உயிர்கள் பல இழந்து
ஊர்கள் பல அழிந்து
உணர்வுகள் மறந்து
இவ்வுலகம் தவிப்பதும்
இந்த மொழியாலேயே

ஆயிரம் மொழியிருக்கும்
அனைத்திற்கும்
ஒவ்வொரு அழகிருக்கும்
இதை உணராத வரை
இவ்வுலகில் போரிருக்கும்

பழமையான மொழி இது
பண்பாடு சொல்லும் மொழியிது
என மார்புதட்டும் தமிழ்
மற்ற மொழியை இகலவில்லை
பண்பிளந்த நமம்மில்
பலருக்கு இது
தெரியவில்லை

உன்னால்
வெறுக்கின்றனர் சிலர்
தமிழை
அதனாலே
எனக்கிந்த
கவலை

மாற்றான் மொழிக்கு
மரியாதை செய்
அதுதான்
உன் மொழிக்கு
பெருமை

No comments: