Monday, October 31, 2011

ஒழுக்கச்சீர்கேடுகளும் பணிப்பெண்களும்

நான் வேலை நிமித்தம் மத்தியகிழக்கு நாடோன்றிலே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றேன். இங்கு நடைபெறுகின்ற பல விடயங்கள் பலர் தெரிந்திருந்தாலும் அவைபற்றி வெளிப்படையாக பேசுவது அரிதாகவே இருக்கிறது. இப்படியான ஒருவிடயம் பற்றி பேசலாம் என்று நினைக்கின்றேன்
மத்தியகிழக்கு நாடு என்கின்றபோது அனைவருக்கும் நினைவில் வருவது வீட்டுப்பணிப்பெண்கள் (HOUSE MAID). நமது நாட்டில் பெருந்தொகையான பெண்கள் மத்தியகிழக்கு நாடுகளிலும் இவை அல்லாத பல நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பணிப்பெண்ள் மத்தியில் காணப்படுகின்ற ஒழுக்கச்சீர்கேடுகளையும் அவை நடைபெறும் விதங்கள் பற்றியும் சற்று வெளிப்படையாக பார்ப்போம்.
இங்கு ஒவ்வொரு விட்டிலும் சாரதிகளும் பணிப்பெண்களும் கட்டாயமாக இருப்பார்கள். விட்டுவேளைகளை பார்க்கும் பணிப்பெண்கள், பிள்ளைகள் (பெண் பிள்ளைகள் அல்லது சிருவயதுடைய ஆண் பிள்ளைகள்) பாடசாலைக்கு போகும் போது அவர்களது புத்தக பொதிகளை சுமந்துகொண்டு சாரதியுடன் பாடசாலைக்கு சென்று பிள்ளைகளை அங்கு விட்டுவிட்டு விடு திரும்பவேண்டும் இவ்வாறே அவர்களை பாடசாலை முடிந்து வரும்போதும் சென்று அழைத்துவர வேண்டும். இதுதவிர விட்டுக்கு தேவையான உணவு பண்டங்கள் வாங்குவதற்காக super market களுக்கு போகும் போதும் எஜமானியுடனும் சாரதியுடனும் சென்று வாங்கிய பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பவேண்டும் சில இடங்களில் சாரதியுடன் தனியாக பணிப்பெண்களை அனுப்பிவைப்பதும் உண்டு.
அநேகமான பணிப்பெண்களுக்கு தொலைபேசிகள் வைத்திருப்பதற்கு அனுமதிப்பதில்லை ஆனால் 95% மானோர் மறைவாக தொலைபேசி பாவிக்கின்றனர். இன்னும் உணவுகள் இவர்களுக்கு விருப்பமான விதத்தில் சமைத்து சாப்பிட அநேகமான விடுகளில் அனுமதி வழங்கப்படும் இதன்போது சாரதிக்கும் உணவு வழங்குவது வழக்கமாக கொள்ளப்படும். காரணம் அநேகமான சாரதிகள் இந்தியா அல்லது இலங்கையை நாட்டவர்களாகவே இருக்கின்றனர்.
இந்த சூழலில் பணிப்பெண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாக இவர்கள் வேலை செய்யும் வீடுகளிலுள்ள ஆண்களினால் (வீட்டுத் தலைவன், ஆண் பிள்ளைகள், முதியவர்கள்) பல பலாத்காரங்களுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இவர்கள் அந்த வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். அல்லது வேறுவழியின்றி அவற்றுக்கு பழக்கப்பட்டு விடுகின்றனர் இதன்மூலம் அவர்கள் பல பலன்களை (பணம், சொகுசு) அடைகின்றனர்.
வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் அவர்களுக்கு எதோ ஒருவகையில் தெரிந்தவர்களுடன் தொடர்புகொண்டு அல்லது பாதைகளில் TAXI ஓட்டுனர்கள் மூலம் ஒருசாரார் EMBERCY சென்று நாடுதிரும்புகின்றனர். மற்றவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் இருப்பார்கள். எனவே இவர்கள் அந்த அந்நிய ஆண்களுடன் சென்று அவர்களின் அறைகளில் தங்கி வேறு ஒரு வீடு தேடுவார்கள். எனவே ஒன்றாக இருப்பதனால் அந்த சூழல் அவர்களை தவறிழைக்க வைத்துவிடுகிறது பின் அது விரும்பியோ விரும்பாமலோ தொடர்கிறது. சிலர் இப்பெண்களை புதிய வீடுகளுக்கு செர்த்துவிடும்போது தனது மனைவி என கூறி ஒப்படைக்கின்றனர் (அராபியர்கள் எழிதில் நம்பிவிடுவார்கள்) பின் எந்த தடைகளுமின்றி அவர்கள் நாடுதிரும்பும்வரை கணவன் மனைவியாவே இருப்பார்கள்.
இன்னும் சில இடங்களில் புதிய வேலைக்கான வீடு தேடுவதட்கிடையில் இப்பெண்கள் பல ஆண்களின் அறைகளுக்கு மாறவேண்டி ஏற்படுகின்றது. காரணம் ஒருவருடைய அறையில் இருக்கும் போது எவரேனும் காவற்துறைக்கு தகவல் கொடுத்தால் இருவரும் சிறைவைக்கப்படுவார்கள் என்கின்ற அச்சம் அல்லது இதன் மூலமும் பணம் ஈட்டும் நோக்கிலும் இவ்வாறு நடைபெறுகின்றது. இந்நிலையில் அப்பெண்களின் நிலை மிக கவலைக்கிடமனதாக இருக்கிறது இன்னும் பெண்கள் ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னுமொரு (தூரப்)பிரதேசத்துக்கு கூட்டிச்செல்லும் போது container பெட்டிகளில் வைத்து கூட்டிச்செல்லப்படுகின்றது. இச்சம்பவங்கள் சவுதி அரேபியவிலே அதிகம் நடைபெறுகின்றது
அனைத்தையும் இழந்து அல்லது துறந்துவிட்டு வருகின்ற இப்பெண்கள். இங்கு வந்தவுடன் அவர்களுக்கு தெரியாத மொழி புதிய முகங்கள் பழக்கமற்ற உணவுகள் இவற்றால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு மத்தியில் வேலைகளை செய்யும் போது இவர்களது கஷ்டங்களை பகிர்ந்துகொல்வதட்கு எவரும் இருப்பதில்லை. இந்நிலையில் இவர்களுக்கு ஆறுதலாக இருப்பதற்காக சாரதிகளுடன் அல்லது இன்னும்சிலர் super market அல்லது வேறு ஏதும் இடங்களில் தனது மொழி பேசுகின்ற ஒருவரை பார்த்தவுடன் அவர்களுடன் பேசுவார்கள் பின் தொலைபேசி இலக்கங்களை பரிமாற்றிக்கொள்வார்கள். பின் உரையாடல்கள் தொடரும் .
பணிப்பெண்களுக்கு தனி அரை வழங்கப்பட்டிருக்கும் இரவு நேரங்களில் இவர்கள் கண்காநிக்கப்படுவது இல்லை. வீட்டிலுள்ள எல்லா உணவு பொருட்களும் இவர்களது பொறுப்பிலே இருக்கும்
மற்றுமொரு சிர்கேடாக கூறுவது என்றால் தொலைபேசி மூலம் பேசுகின்ற ஆண்களிடமிருந்து தொலைபேசிக்கு card வாங்கி அனுப்புதல் மற்றும் சிறுசிறு உதவிகளை பெற்றுக்கொள்வார்கள் இதன் பின் அப்பெண்கள் தான் வேலைசெய்யும் விட்டிலுள்ள உணவு பொருட்களை இவர்களுக்கு கொடுப்பார்கள். இதற்காக இவர்கள் கையாளும் உக்திகளில் ஒன்று அந்த ஆண்களை தனது விட்டுக்கு அருகில் வரும்படி சொல்லிவிட்டு இப்பெண்கள் அப்பண்டங்களை வெளியே வைத்துவிட்டு செல்வார்கள் பின் இவர்கள் அதனை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவான் இவ்வாறு பல திருட்டுக்கள் நடைபெறுகின்றது. இப்படி இவர்களுக்கு இடையிலே ஒரு பெரிய பிணைப்பு ஏற்படுகின்றது இதன் விளைவாக இப்பெண்கள் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக அவ்வான்களை தனது அரைகளுக்கு அனுமதிப்பதும் உண்டு (இப்பெண்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் உறக்கத்திலுள்ள நேரம் விளிக்கும் நேரம் அனைத்தையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள்)
வீட்டு வேலைகள் செய்வதிலிருந்து கடைகளுக்கு செல்லுவது வரை பணிப்பெண்களுக்கும் அவ்வீட்டில் உள்ள ஒட்டுனருக்கும் இல்டையிலே அதிக தொடர்ப்பு காணப்படும் அந்த சூழலும் இவர்களை தவறான வழியில் இட்டுச்செல்லுகின்றது அதிகமான இடங்களில் இவர்களுக்கு இடையில் தவறான தொடர்புகள் சர்வசாதாரணமாக கருதப்படுகின்றது
இன்னும் குவைத் போன்ற நாடுகளில் இப்பனிப்பெண்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகின்றது இதன்போது இவர்கள் கடைத்தெருக்களில் சுற்றித்திரிவார்கள் புதிய நடப்புக்களை எட்படுத்திக்கொல்வார்கள் அவர்களுடன் உல்லாசமாக இருப்பார்கள். இப்படி ஆரம்பித்து இன்னும் சிலர் படிப்படியாக பணத்திற்காக தவறான வழியில் செல்கின்றனர்.
எந்தப்பெண்ணும் வெளிநாடு செல்லும் போது இவ்வாறான எண்ணங்களுடன் வருவதில்லை ஆனால் இங்கு வந்தவுடன் சுழலும் ஏக்கமும் அவர்களின் மனநிலையை படிப்படியாக மாற்றுகின்றது இறுதியில் நான் மேலே கூறிய சீர்கேடுகளை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவது இல்லை.
என்னை பொருத்தமட்டில் 10% - 15% பெண்களே இவ்வாறான சீர்கேடுகளில் சிக்காது இருக்கின்றனர் இந்நிலை ஏற்படுவதற்கு பெண்களே அல்லது ஆண்களே காரணம் என்று கூறமுடியாது. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் தீப்பற்றியே தீரும்.
எனவே இப்படியான ஒரு சுழலுக்கு வேலைக்கு வருகின்ற போது கணவன் மனைவி இருவரும் ஒரே விட்டில் வேலைக்கு வருவார்களேயானால் இவ்வாறான ஒழுக்கசிர்கேடுகளும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கிறது.
இது தவிர பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகின்ற பெற்றோர்களும் உடன்பிறப்புக்களும் தெரிந்துகொண்டே மிகப்பெரிய தவறை செய்கின்றீர்கள் அத்துடன் இங்கு நடைபெறுகின்ற எல்லா சீர்கேடுகளுக்கும் நீங்களே முளுகாரணமாக இருக்கிண்றீன்ரக் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

No comments: