Tuesday, March 29, 2011

சேவைக்கு நன்றி

சமுக வளர்ச்சிக்காய்
சற்றும் சலிப்பே இன்றி
சஹாக்களையும் சேர்த்து
சங்கம் அமைத்து
சேவை செய்யும் இளைஞ்சனே

வீணாய் போனவர்கள் மத்தியில்
விலை மதிப்பற்ற சொத்தாய்
விரலுக்கேற்ற வீக்கம் எடுக்கும்
வீரர்களே வாழ்த்துக்கள்

சங்கங்கள் பல இருந்தும்
இங்கு
சண்டை இல்லை... சச்சரவில்லை.....
போட்டி இல்லை.... பொறமை இல்லை......
படிப்பினை உண்டு மத இயக்கங்களுக்கு
இதுதான் பலன் எதிர்பாரத கூட்டம்

இணைந்த உள்ளங்கள்
இயன்ற அளவு இயங்குவதை
தட்டி கொடுத்து உதவுங்கள்
அல்லது
உபத்திரவம் செய்யாமலாவது இருங்கள்

சமுகம் அது விரிந்தது
கிளைகள் பல கொண்டது
சேவைகள் சில கண்டது
இளைஞ்சனாலையே இது நடந்தது
நன்றி

No comments: