Tuesday, November 26, 2013

மார்க்க பிரச்சாரங்கள் இன்று தனிநபர் அல்லது ஒருகுழு எதிர்ப்பு பிரச்சாரமாக மாறிவருவது....



அஸ்ஸலாமு அலைக்கும்
 
மிகவும் மனவருத்தத்துடன் இந்த பதிவை தருகின்றேன். இன்றைய தமிழ் தவ்வாஹ் களத்திலே காணப்படுகின்ற மிக கேவலமான அணுகுமுறைகளை பார்க்கின்ற போது இவர்கள் எல்லாம் இஸ்லாம் பேசுவதற்கு தகுதியானவர்களா என்று நினைக்க தோன்றுகின்றது.

மார்க்க பிரச்சாரங்கள் இன்று தனிநபர் அல்லது ஒருகுழு எதிர்ப்பு பிரச்சாரமாக மாறிவருவது மிக கவலைக்குரிய விடயமாகும். இஸ்லாம் சொல்கின்ற அழகிய பிரச்சாரமுறையோ தனிநபர் அல்லது ஒரு குழுவின் தவறுகளை பொதுமேடைகளில் பேசும் போது அணுக வேண்டிய (இஸ்லாம் கூறிய) முறைகளோ கையாளப்படுவதில்லை.

தன்னை மட்டுமே ஏகத்துவவாதிகள் மற்றும் சுவர்க்கத்தின் ஏகபோக சொந்தக்காரர்கள் என்று பறை சாற்றும் சகோதரர்களின் அணுகுமுறைகள் மிக மோசமாகவும் அவர்களது அண்மைக்கால அனேகமான பிரச்சார வீடியோக்களில் தவறாமல் ஒருவரையோ அல்லது பலரையோ சாடுவதையே கொள்கையாக கொண்டுள்ளது மிக தெளிவாக விளங்குகின்றது

அத்துடன் இவர்களினதும் இவர்களது சக ஆதரவாளர்களினதும் பொதுவான ஒரு வேண்டுகோளாக இருப்பது பொது விவாதத்திற்கு அழைப்பதும் வராத விடத்து அவர்களை பொய்யர்கள் என்று மக்களுக்கு எடுத்துக்காட்டி பாமர மக்களை சிந்திக்காமல் தடுக்கின்றனர்

பொதுவாக இவர்கள் கூப்பிடுவது போன்று விவாதத்திற்கு வரவேண்டும் என்கின்ற கட்டாயமோ நிர்ப்பந்தமோ எவருக்கும் இல்லை என்பதுடன் விவாதத்திற்கு வராதவர்களை வழிகேடர்கள் என்று சொல்லும் அதிகாரம் இவர்களுக்கும் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்

விவாதங்கள் அழகிய முறையில் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது விவாதம் விதண்டாவாதமாகும் போது சலாம் கூறி பிரிந்துவிடுமாரும் இஸ்லாம் கூறுகின்றது. இன்றைய நிலையில் விவாதங்களில் அழகிய முறைகள் கையாளப்படுவதில்லை என்பதனால் ஒருவர் விவாதத்திற்கு வரவில்லை என்பதற்காக அவரதுகருத்து பொய் என்று மக்களை நம்ப வைப்பது பெரிய குற்றம் என்பதையும் பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்

விவாதங்களில் ஒருவர் வாதத்திறமையால் கூட தனது கருத்தை உண்மையென்று நிறுவ முடிகின்றது (பொதுவாக நீதிமன்றகளில் வழக்கறிஞ்ஞர்கள் செய்வது போல) ஒருதரப்பு வைக்கின்ற வாதத்திற்கு சரியான பதில் அந்த சமயம் மற்றைய தரப்புக்கு தெரியாமல் இருக்கலாம் அவர்களின் ஆற்றல்களுக்கு அமையவே விவாதங்களின் பொது கருத்துக்கள் வேரூன்ரப்படுகின்றது

இவ்வாறான பல விடயங்கள் விவாதத்தில் இருக்கின்றது என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன் உண்மையை உண்மையாக்குவதற்கு விவாதமே ஒரே வழி  என்று கருதுவதும் அந்த கருத்தை விதைப்பதும் முற்றிலும் தவறாகும்

ஒருகாலத்தில் ஷஹிகான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்றும் அதை முரண்படாதவிதத்தில் விளங்க வேண்டும் என்று கூறியவர்கள் இன்று இல்லை அப்படி முரண்படுவது போன்று விளங்கும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தனது கொள்கையை மாற்றிக்கொன்டதுடன் பின் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் சஹீஹ் என்கின்ற தரத்தில் இல்லை என்றும் வாதிடுகின்ற நிலையில் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாத அல்லது இவர்களின் விளக்கத்தில் தெளிவுகிடைக்காத ஒருசாரார் இதனை எதிர்த்து பிரச்சாரம் செய்கின்ற இந்த சூழலில் இருசாரார்களுக்கும் இடையில் பாரிய கருத்துச்சன்டைகள் வீடியோக்கள் மூலமாக பரிமாற்றப்படுகின்றன என்பது யாவரும் அறிந்ததே

எனவே உண்மையை உள்ளபடி விளங்குவதற்கு இறைவன் எங்களுக்கு அருள்புரிவானாக


அனுராதபுரம் நிசாம்  பாரூக் சவுதி அரேபியாவில் இருந்து

No comments: