Monday, April 2, 2012

கருத்துச்சண்டை


உலகத்தில கருத்து வேறுபாடுகளும் அதனை ஒட்டிய பிரச்சனைகளும்
இருந்துகொண்டேதான் இருக்கின்றது. இந்த கருத்து வேறுபாடுகள் பல சந்தர்ப்பங்களில் பெரிய பிரச்சைகளாக மாறுவதற்கு நாமே பிரதான காரணமாக இருக்கின்றோம்.

பொதுவாக அனைவருடைய கருத்துக்களிலும் அவர்களின் அனுபவங்களும் புரத்தாக்கங்களினாலும் சூழல் சூல்நிலைகள் போன்றவையும் அதிகமான தாக்கத்தை செலுத்துகின்றது. இந்நிலையில் அந்த சூழலுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழலிலுள்ள ஒருவருக்கு இவரது கருத்து முற்றிலும் பிழையானதாக தென்படுகின்றது இந்நிலையில் இவ்விருவருக்கிடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுகின்றது.

ஒருவரின் கருத்தில் மற்றவருக்கு உடன்பாடில்லை என்றாலும் கூட அவரது கருத்தை உரியமுறையில் மதிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் அந்த கருத்தை கூறியவரும் தனது கருத்தை மற்றவர்கள் அனைவரும் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற மனநிலையில் இருபாதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலை எங்களிடையே மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.

கருத்து வேறுபாடு ஏற்படும் பல சந்தர்ப்பங்களில் எனக்குள் எழுகின்ற ஒரு சிந்தனை “நான் ஏன் அப்படி யோசிச்சிருக்க கூடாது” அல்லது “அவர்கள் அப்படி யோசிதத்தில் என்ன தவறு இருக்கு” என்று அவர்களின் நியாயத்தை சற்று நடுநிலையாக இரு சாராரும் சிந்திப்பர்கலேயானால் இந்த முரண்பாட்டில் நியாயங்கள் உள்ளதை உணரமுடிகின்றது

சில சந்தர்ப்பங்களில் நம்மை விட அந்தஸ்த்தில் குறைந்த ஒருவர் நம்மை விட சிறந்த கருத்து கண்ணோட்டமுடையவராக இருக்ககூடும் இந்நிலையில் அவரது கூற்றை என்ருக்கொல்வதில் நமக்கு தால்வுச்சிக்கள் இருப்பதாக கருதுகின்றோம். இது உண்மையிலையே தவிர்க்கப்படவேண்டிய ஒரு மனநிளையாகும்.

தனது கூற்றை நியாயப்படுத்துவதட்கு நாம் முயற்சிப்பது வழமை ஆனால் அதைவிட நாம் எப்பொழுது மற்றவர்களின் கூற்று எமது கூற்றுக்கு முரணாக அமையும் போது அக்கூற்றிலும் உண்மை நியாயம் இருக்கிறதா என்று தேடத்தொடங்குகின்றோமோ அன்றிலிருந்து இவ்வாறான முரண்பாடுகளை கணிசமான அளவு குறைக்கலாம் என எதிர்ப்பர்க்கின்றேன்.
எனவே கருத்து சிக்கல்களை சிறந்தமுறையில் கையாலக்கூடியவர்களாக எங்களை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்

No comments: