Tuesday, January 17, 2023

நாடு இருக்குது, இன்னமும் இருக்குது

 கவி பாடி பல்லாண்டு ஆயிருச்சு 

கால ஓட்டத்தில் அனைத்தும் மறந்து தூரம் ஆயிருச்சு

நாடு திரும்பி ஐந்தாறு ஆண்டாயிருச்சு 

நல்லாட்சி என்று ஒரு ஆட்சி தான் 

அந்தக் காலத்தில் இருந்துச்சு


ஈஸ்டர் தாக்குதல் நடத்தி  மூவாண்டாயிருச்சி

கொரோனா வந்ததும் 

நம்ம சார் ஆட்சிக்கு வந்ததும் ஒன்றாயிருச்சு


வக்சினேசன் கொடுத்து கொரோனாவை அடக்கி ஆச்சு 

அரகலய மூலம் நம்ம சேரையும் தூக்கி ஆச்சு

ஆட்சியை துறந்து ஆறு மாதம் ஆயிடுச்சு

ஆக மொத்தத்துல எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு


நல்லா செய்தவங்க இவங்க தான் என்று பேச்சிருக்க

நாட்டுல கிடைத்தது எல்லாமே கிடைக்காமல் இருக்க

கால நேரமெல்லாம் கிவுல போயிட்டு இருக்க

அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழியில்லாமல்

மக்கள் திண்டாடிட்டு இருக்க


நாட்டைக் காக்க யாரும் முன் வராது இருக்க

போனஸ்ல வந்தவர் தான் சார் 

பொம்மை போல வந்துட்டாரு ஜனாதிபதியாகி

சாவுக்கு முன்னாடி கனவை நினைவாக்கின சால்வைக்கு நன்றி கூறி


மூன்று வேளை சாப்பாடு கொடுக்க

வந்திருக்கிறார் நம்ம சாரு

இப்ப ரொம்ப உஷாரா தான் இருக்காரு

எதிர்த்துப் பேசினா அரஞ்சு உள்ள போடுகிறாரு.


இப்படி நிலவரம் இருக்கையில 

நாட்டை விட்டு திரும்ப போறதா முடிவு ஆயிருச்சு

நாட்டை விட்டு வந்தும் இப்ப மூன்று மாதம் ஆயிருச்சு

நாடு இருக்குது

இன்னமும் இருக்குது

அழகான அனைத்து வளங்களும் பொருந்திய நாடென்று புத்தகங்களில்  எழுதியிருக்குது.


நிசாம் பாரூக்

Nizam Farook

Thursday, October 1, 2015

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 

பருவம் அறியா பிஞ்சுகளே 
பால்வாசம் மாறாத பருவமதினிலே
பாரைவிட்டு பிரியும் சோகம் அது  
மனித மிருகம் செய்யும் அவலம் 

மன்னிக்கவேண்டுகின்றேன் 
மானிடம் செய்யும் பிழையால் இங்கு 
மிருகங்களை கொச்சைப்படுத்தியதற்கு

சீமா வித்யா சயோமி என 
தொடரும் இந்த அவலம் - ஆனாலும் 
சீரழித்த அந்த அசிங்கங்களுக்கு இன்னும் 
எமது சொந்தப்பணத்தினிலே  
சோருற்றுகின்றோம்
சிறையினிலே நிம்மதியாய் வாழ 
வழிவகுத்து கொடுத்திருக்கின்றோம்

கைது தொடக்கம் நீதி கிடைக்கும் வரை 
நியாயமே இன்றி 
பாதிக்கப்பட்டவன் பணத்தில் 
விசாரணை நடத்துகின்றோம் 

பொறிமுறை மாற வேண்டும் 
அறநெறி ஓங்க வேண்டும் 
மனித உயிர் பெருமை விளங்க வேண்டும் 
மலர்களின் அருமை புரிய வேண்டும் 
இதற்கெல்லாம்
மனது ஒருநிலைப்பட வேண்டும் 

மனது ஒருநிலைப்பட மாசற்ற சூழல் வேண்டும் 
மகத்துவமாய் வளர்க்கப்பட வேண்டும் 
நன்மை தீமை உணர்த்தப்பட வேண்டும் 
வஞ்சகம் போட்டி பொறமை ஒழிக்கப்பட வேண்டும் 
பிறரை மதித்து வாழ பழக்கப்பட வேண்டும் 
பிறரிடம் விழிப்பாய் வாழவும் பழக்கப்பட வேண்டும் 
பெற்றோர் மட்டுமே 
தமக்காக வாழ கடமைப்பட்டவர்கள் என உணர்த்தப்பட வேண்டும் 

பிஞ்சுகளை நாமும் அன்போடு அனைத்து அரவணைக்க வேண்டும் 
அன்புக்கும் செல்லத்துக்கும் வித்தியாசம் நமக்கு புரிய வேண்டும்.
செல்லத்தை அளந்தே கொடுக்க வேண்டும்  
சண்டை சச்சரவுகளை அவர்கள் முன் அடக்கிட வேண்டும் 
மற்றவர் குறைகளை மறைத்திட வேண்டும்
சமுகம் போற்றும் பிள்ளைகளாய் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும் 

இதற்கான சக்தியையும் 
சிறார்களுக்கான பாதுகாப்பையும் 
எல்லாம்வல்ல இறைவன் வழங்கிட வேண்டும் 

வாழ்த்துக்கள் 

Saturday, January 31, 2015

வீணாப்போன சமுக சேவகர்களே

அஸ்ஸலாமு அழைக்கும்

சமுக சிந்தனை சமுக சீர்திருத்தம் என்று கூறிக்கொண்டு கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ பற்றியும் அதனுடன் தொடர்பான ஓடியோ பற்றியும் எழுதுகின்ற பகிர்கின்ற வீணாப்போன  சமுக சேவகர்களே

உங்களது இந்த செயலினால் ஏற்படுகின்ற அனைத்து பாவங்களுக்கும் அல்லாஹ்விடம் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள்

ஒரு தவறு பற்றி எழுதும் போது அதனை வர்ணித்து விவரித்து பிறரையும் பார்ப்பதற்கோ அல்லது அந்த செயலை செய்வதற்கோ ஆசையூட்டும் விதமாக அமைய கூடாது அதிலும் சமுகவலைத்தளத்தில் எழுதுகின்ற போது மிக கவனமாக செயற்பட வேண்டும் என்கின்ற அடிப்படையை கூட பலர் கவனிப்பது இல்லை

சமுக வலைத்தளங்களில் பகிர்கின்றபோது அதனை பலர் பல கோணங்களில் நோக்குகின்றனர் அதன் மூலம் ஒரு கணிசமானோர் எழுதியவரின் அல்லது பகிர்ந்தவரின் நோக்கத்துக்கு முற்றிலும் மாறாக அதனை புரிந்துகொண்ட செயட்பப்டுவதும் உண்டு.

ஏதேனும் ஒரு பாவச்செயல் நிகழும் பொது அதன் மூலம் மேலும் பவம் தொடரும் அபாயம் இருக்கும் பொது அதனை மிக நிதானமாக கையாளவேண்டும்

 இந்த நிகழ்வின்போதும் இதுபற்றி ஒரு தீர்வு எடுக்க விரும்பியவர்கள் முதலில் அதனுடன் தொடர்புடையவர்களை நேரடியாக தொடர்புகொள்ள முயட்சித்திருக்கலாம் அல்லது அந்த பிரதேசத்துக்கு சென்று அதற்கான சட்டநடவடிக்கை எடுக்க முயட்சித்திருக்கலாம்.

அப்படியான முயற்ச்சியை செய்திருந்தாலும் அதனை பரப்பவேண்டிய அவசியம் இல்லை மாறாக இணையம் பற்றிய ஒரு விழிப்புணர்வை  பெண்கள் மத்தியில்  எடுத்து செல்வது அதனுடன் தொடர்பான வேலைத்திட்டங்களை பொதுவாகவும் ஆழமாகவும் செயற்படுத்த வேண்டி இருக்கின்றது

அதைவிட்டு விட்டு நாமும் ஆராய்கின்றோம் ஆராய்ந்தோம் என்று பலருக்கு பகிர்ந்து பெரிய ஆய்வலர்களாக மாறிவிட்டார்கள் இப்படியான சேவர்கள் இதனை விடவும் சமுகம் எதிர்நோக்குகின்ற எத்தனையோ  பிரச்சனை பற்றி ஒரு நிமிடமேனும் ஆராயிந்திருக்க மாட்டார்கள்

ஒரு தவறை பற்றி ஆராயும் பொது அதனை அனைவரும் பார்த்து அனைவரும் ஆராய வேண்டிய அவசியம் இல்லை இந்த நிகழ்வின்போது பின்வரும் மூன்றில் ஒன்றே நிகழ்திருக்கும்

1)இருவரும் தெரிந்தே தவரிளைத்திருக்கலாம்

2) ஒருவரை ஒருவர் ஏமாற்றி இருக்கலாம்

3) இருவரையும் மூன்றாவது ஒரு நபர் ஏமாற்றி இருக்கலாம்

எனவே உண்மையான சமுக சிந்தனை ஈமானிய உணர்வுடைய எவரும் இந்த மூன்று காரணங்களுக்குமான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் போதுமானது அகவே வேறு எந்த ஆய்வும் அவசியமற்றது அல்லது பவச்செயளாகவே அமையும்

Saturday, April 12, 2014

முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும், மார்க்க இயக்கங்களுக்கும் எனது பணிவான ஒரு ஆலோசனை

அஸ்ஸலாமு அழைக்கும்,

கடந்த சில காலங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக நகர்த்தப்படும் அனைத்து சதி அல்லது அடக்குமுறைகளையும்  அவதானிக்கும் போது இவை அனைத்தும் ஒரு பலம்பொருந்திய சக்தியினால் திட்டமிடப்பட்டு செயட்படுத்தப்படுகின்றது என்பது தெட்டதெளிவாக விளங்குகின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக போது பாலா செனாவினால் மேட்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களை அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் வன்மையாக கண்டித்து எதோ ஒரு முறையில் அறிக்கைகளை விட்டிருப்பது பாராட்டுக்குரியதே அனால்  இவைகள் அறிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் ஒன்றிணைந்து  மேட்கொல்லுவார்கள் என்கின்ற ஒரு எதிர்பார்ப்புடன் எமது சமுகம்  காத்திருக்கின்றது

இந்நிலையில் அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மார்க்க இயக்கங்களுக்கும் எனது பணிவான ஒரு ஆலோசனையாக  அல்லது அன்பான வேண்டுகோளாக விடுக்க விரும்புகின்றேன் 

பொதுவாக இப்படியான சூழ்நிலைகளை முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒருவர் மற்றயவர்களின் பிழைகளை குத்திக்காட்டிகொடிருக்காமல் அவர்களுடனும் பேசி ஒருங்கிணைத்து ஒரு சமுக நலனுக்காக பாடுபடும்படி வேண்டிக்கொல்வதுடன் உங்களது மேலான திட்டங்களையும் முடிவுகளையும் உடனுக்குடன் மீடியாக்களில் வழங்குவதிலும் எந்த பலனும் இல்லை என்று நினைக்கின்றேன்.

பொதுவாக அந்நிய சக்திகள் அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது மீடியாக்களில் கசிவதட்கு முன்பே   அவர்கள் அந்த நடவடிக்கைக்கான சகல ஏற்பாடுகளும் செய்து முடிந்திருப்பர்கள்.  ஆனால் எமது சமுகம் எதனையும் செய்வதற்கு முன்னமே அதாவது ஒரு எண்ணம் உதித்தாலே அதனை மீடியாக்களில் தானாகவே முன்வந்து தெரிவித்துவிடுவார்கள் இறுதியில் அந்த செயல்திட்டம் நிறைவேற்றப்பட முடியாதவாறு வேறு ஒரு பிரச்னையை முடிக்கிவிடப்பட்டிருக்கும்.

எனவே இவ்வாறான செயல்களில் சற்று நிதானமாக நடந்துகொள்வது மிக சிறந்தது என நினைகின்றேன்

நன்றி

நிசாம் பாரூக் சவுதியரேபியாவில் இருந்து,

Thursday, March 27, 2014

பெண்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும்



அஸ்ஸலாமு அழைக்கும் 

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான ஒரு பணிவான வேண்டுகோள் எனது இந்த பதிவை நடுநிலையாக வாசிப்பீர்கள் என்கின்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.
அண்மைகாலமாக எமது சமூகத்திலே ஒரு புதிய பழக்கம் உருவாகி வருவதை மிக மனவருத்தத்துடன் அவதானிக்க முடிகின்றது. அதாவது ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் என்பவற்றிற்கு பெண்களையும் அலைத்துவருவதும் அவர்கள் கோஷமிட்டவாறு பாதைகளிலே ஊர்வலமாக செல்வதும் அதிகரித்து வருகின்றது.
முஸ்லிம் பெண்கள் இதுவரைகாலமும் ஆர்ப்பாட்டங்களில் இடுபடாமலே இருந்தார்கள் என்று கூறுவதற்கு இல்லை, ஆனால் சமீப காளங்களில் சில அடப அல்லது இயக்கம் வளர்க்கும் சிலரால் இது அதிகம் தூண்டப்பட்டு வருவது காணக்கூடியதாக இருக்கிறது.
பொதுவாக ஆண்களை பெண்களையும் படைத்த இறைவன் பெண்களை நிர்வஹிக்கும் பொறுப்பை ஆண்களிடம் ஒப்படைத்துல்லன் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. தன்னால் நிருவஹிக்க முடியாது என்பதையும் ஆண்கள் மட்டும் ஆர்ப்பாட்டம் செய்து சாதிக்க முடியாது என்பது போலவுமே தற்போது பெண்களையும் இவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு  அழைத்துவருகின்றார்கள்.
பெண்கள் விசயத்தில் இஸ்லாம் பல வரையறைகளை விதித்திருப்பதுடன் அவர்களது அவசியம் அல்லது நிர்ப்பந்தம் என்று வருகின்ற பொது அதற்கான மாற்று நடவடிக்கைகளையும் கூரத்தவரவில்லை. ஆனால் இன்று மார்க்கம் பேசும் எம்மில் பல அறிஞ்சர்கள் அந்த மாற்று நடவடிக்கைகளையே ஆதாரமாக கட்டி எமது பெண்களை விதிக்கு இறக்குகிறார்கள் என்பதுதான் மிக கவலைக்கிடமாக உள்ளது அதற்கு ஒரு சிறந்த உதாரணங்களாக அண்மையில் நடைபெற்ற இரு நிகழ்வுகளை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

மாதம்பையில் எஸ்.எல்.டி.ஜே. புதிதாக ஆரம்பித்த ஜும்மா தொழுகைக்கு எதிராக பெண்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம். தொழுகைக்கான இடம் ஒன்றை தேவையில்லை என்று ஆர்பாட்டத்தில் ஈடுபடுவது எப்படியாபட்ட குற்றம் என்பதை யாவரும் அறிந்ததே இந்த ஆர்ப்பாட்டத்தை பெண்கள் செய்வதற்கான நிர்ப்பந்தம் அல்லது அவசியம் எப்படி ஏற்பட்டது கண்டிப்பாக இதனை யாராலும் நியாயப்படுத்த முடியாது. (இதன் விளைவாக இவர்களின் படங்கள் தற்போது இணையம் உட்பட அனைத்து இடங்களிலும் பரப்பப்பட்தத்துடன் பௌத்த கடும்போக்கு இயக்கங்களுக்கு இது சாதகமாகவும் அமைந்துவிட்டது)
இரண்டாவது
இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஜெனிவா பிரேரணையை எத்திக்கும் முகமாக பெண்களை வீதியிலே கோஷமிட்டவாறு ஊர்வலமாக அழைத்து செல்வதற்கான அவசியம் நிர்ப்பந்தம் எங்கிருந்து வந்தது. ஆண்கள் மாத்திரம் இந்த ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தால் என்ன??? ஆண்கள் மாத்திரம் செய்திருந்தால் இது சென்றடையாது என்று ஏற்பாட்டாளர்கள் நினைகின்றார்களா?? அப்படி நினைப்பர்கலேயனால் இவர்களிடமிருந்து எமது பெண்களை பாதுகாக்கவேண்டிய மிக பெரிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. காரணம், நாளை இவர்கள் இவர்களது கருத்து சென்றடைய வேண்டும் என்பதற்காக இதைவிடவும் அடப விசயங்களுக்கும் பெண்களை முன்னிறுத்த கூடும்.
அத்துடன் இந்த ஜெனிவா பிரேரணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமா??? என்பதே ஒரு பெரிய சர்ச்சையில் உள்ளது காரணம் அரசு யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறியுள்ளது என்பதே இங்கு வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இது உண்மையா பொய்யா என்பது இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவருக்கேனும் உருதியாக கூறமுடியாத ஒரு விடயம்.
ஆனால் அதற்கு இவர்கள் வைக்கும் வாதம் புலிகள் இதைவிட அதிக மனித உரிமை மீறல்களிள் ஈடுபட்டர்கள் அவர்களுக்கு எதிராக ஜெனிவா (ஐநா) எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது.
ஒரு அரசாங்கத்திற்கும் ஒரு அங்கீகரிக்கப்படாத தடைசெய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்புக்கும் இடையிலான வித்தியாசமும் சட்ட ஒழுங்குகளையும் கூட புரிந்துகொள்ளமுடியாத இவர்கள் எப்படி மக்களை நேர்வழிப்படுத்த போகிரார்கள்
அத்துடன் இவர்களது இன்னுமொரு வாதாம் மத்திய ஆபிரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனச்சுத்திகரிப்புக்கு எதிராக பிரேரணை கொண்டுவராமல் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்தது தவறு என்கின்றனர் இதில் கூட இவர்களது நியாயமற்ற தன்மையை விளங்க முடிகின்றது. (மத்திய ஆபிரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனச்சுத்திகரிப்புக்கு எதிராக பிரேரணை கொண்டுவர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை)
மத்திய ஆபிரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனச்சுத்திகரிப்புக்கு எதிராக பிரேரணை கொண்டுவருமாறு ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் பரவாயில்லை ஆனால் அதற்கு பிரேரணை கொண்டுவரவில்லை என்று குற்றம் சாத்திவிட்டு இலங்கைக்கு எதிராக கொடுவந்த பிரேரணையை எதிர்க்கிறார்கள்.

ஏனவே இப்படியான அட்ப தெளிவில்லாத தவறான விடயங்களுக்கு தங்களையும் எங்கள் பெண்களையும் ஈடுபடுத்தாமல் இருப்பதற்கு முயற்சிப்போமாக
இவ்வாறான நியாயமட்டதும் தெளிவற்றதுமான கொள்கையுடைய இவர்களது பேச்சுக்களில் இருந்தது எமது சமுகத்தை எல்லாம்வல்ல இறைவன் அல்லாஹ் காத்தருள்வானாக  

வஸ்ஸலாம்  

நிசாம்  பாரூக் சவுதி அரேபியாவில் இருந்து

Tuesday, November 26, 2013

மார்க்க பிரச்சாரங்கள் இன்று தனிநபர் அல்லது ஒருகுழு எதிர்ப்பு பிரச்சாரமாக மாறிவருவது....



அஸ்ஸலாமு அலைக்கும்
 
மிகவும் மனவருத்தத்துடன் இந்த பதிவை தருகின்றேன். இன்றைய தமிழ் தவ்வாஹ் களத்திலே காணப்படுகின்ற மிக கேவலமான அணுகுமுறைகளை பார்க்கின்ற போது இவர்கள் எல்லாம் இஸ்லாம் பேசுவதற்கு தகுதியானவர்களா என்று நினைக்க தோன்றுகின்றது.

மார்க்க பிரச்சாரங்கள் இன்று தனிநபர் அல்லது ஒருகுழு எதிர்ப்பு பிரச்சாரமாக மாறிவருவது மிக கவலைக்குரிய விடயமாகும். இஸ்லாம் சொல்கின்ற அழகிய பிரச்சாரமுறையோ தனிநபர் அல்லது ஒரு குழுவின் தவறுகளை பொதுமேடைகளில் பேசும் போது அணுக வேண்டிய (இஸ்லாம் கூறிய) முறைகளோ கையாளப்படுவதில்லை.

தன்னை மட்டுமே ஏகத்துவவாதிகள் மற்றும் சுவர்க்கத்தின் ஏகபோக சொந்தக்காரர்கள் என்று பறை சாற்றும் சகோதரர்களின் அணுகுமுறைகள் மிக மோசமாகவும் அவர்களது அண்மைக்கால அனேகமான பிரச்சார வீடியோக்களில் தவறாமல் ஒருவரையோ அல்லது பலரையோ சாடுவதையே கொள்கையாக கொண்டுள்ளது மிக தெளிவாக விளங்குகின்றது

அத்துடன் இவர்களினதும் இவர்களது சக ஆதரவாளர்களினதும் பொதுவான ஒரு வேண்டுகோளாக இருப்பது பொது விவாதத்திற்கு அழைப்பதும் வராத விடத்து அவர்களை பொய்யர்கள் என்று மக்களுக்கு எடுத்துக்காட்டி பாமர மக்களை சிந்திக்காமல் தடுக்கின்றனர்

பொதுவாக இவர்கள் கூப்பிடுவது போன்று விவாதத்திற்கு வரவேண்டும் என்கின்ற கட்டாயமோ நிர்ப்பந்தமோ எவருக்கும் இல்லை என்பதுடன் விவாதத்திற்கு வராதவர்களை வழிகேடர்கள் என்று சொல்லும் அதிகாரம் இவர்களுக்கும் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்

விவாதங்கள் அழகிய முறையில் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது விவாதம் விதண்டாவாதமாகும் போது சலாம் கூறி பிரிந்துவிடுமாரும் இஸ்லாம் கூறுகின்றது. இன்றைய நிலையில் விவாதங்களில் அழகிய முறைகள் கையாளப்படுவதில்லை என்பதனால் ஒருவர் விவாதத்திற்கு வரவில்லை என்பதற்காக அவரதுகருத்து பொய் என்று மக்களை நம்ப வைப்பது பெரிய குற்றம் என்பதையும் பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்

விவாதங்களில் ஒருவர் வாதத்திறமையால் கூட தனது கருத்தை உண்மையென்று நிறுவ முடிகின்றது (பொதுவாக நீதிமன்றகளில் வழக்கறிஞ்ஞர்கள் செய்வது போல) ஒருதரப்பு வைக்கின்ற வாதத்திற்கு சரியான பதில் அந்த சமயம் மற்றைய தரப்புக்கு தெரியாமல் இருக்கலாம் அவர்களின் ஆற்றல்களுக்கு அமையவே விவாதங்களின் பொது கருத்துக்கள் வேரூன்ரப்படுகின்றது

இவ்வாறான பல விடயங்கள் விவாதத்தில் இருக்கின்றது என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன் உண்மையை உண்மையாக்குவதற்கு விவாதமே ஒரே வழி  என்று கருதுவதும் அந்த கருத்தை விதைப்பதும் முற்றிலும் தவறாகும்

ஒருகாலத்தில் ஷஹிகான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்றும் அதை முரண்படாதவிதத்தில் விளங்க வேண்டும் என்று கூறியவர்கள் இன்று இல்லை அப்படி முரண்படுவது போன்று விளங்கும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தனது கொள்கையை மாற்றிக்கொன்டதுடன் பின் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் சஹீஹ் என்கின்ற தரத்தில் இல்லை என்றும் வாதிடுகின்ற நிலையில் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாத அல்லது இவர்களின் விளக்கத்தில் தெளிவுகிடைக்காத ஒருசாரார் இதனை எதிர்த்து பிரச்சாரம் செய்கின்ற இந்த சூழலில் இருசாரார்களுக்கும் இடையில் பாரிய கருத்துச்சன்டைகள் வீடியோக்கள் மூலமாக பரிமாற்றப்படுகின்றன என்பது யாவரும் அறிந்ததே

எனவே உண்மையை உள்ளபடி விளங்குவதற்கு இறைவன் எங்களுக்கு அருள்புரிவானாக


அனுராதபுரம் நிசாம்  பாரூக் சவுதி அரேபியாவில் இருந்து

Tuesday, October 15, 2013

கதரவைக்கும் ஒரு கண்ணியமான பெருநாள்



தித்திக்கும் தியாகத்திருநாள்
நம்மை கதரவைக்கும்
ஒரு கண்ணியமான பெருநாள்

சோகம் நிறைந்த மனதோடு
சுபஹ் அதானிலே விழித்தேலுகின்றோம்
மயான அமைதியிலே
பெருநாள் தொழுகைக்கு புறப்படுகின்றோம்
மங்களகரமான பழைய நினைவுகளை
மனதிலே சுமந்தவாறு

தித்திக்கும் நாள் நாளை என்றால்
துள்ளிக்குதித்து பம்பரமாய் ஓடித்திரிந்து
புத்தாடை உட்பட
பலகாரம் முருக்கு தொதல் என அப்பப்பா
அழகான ஆயத்தங்கள்
தாய் நாட்டில் இருக்கும் வரை

இங்கு திருநாள் என்றாலே
அது ஒரு தொடர் விடுமுறை
என்பதில் மட்டுமே மகிழ்ச்சி

பெருநாள் தொழுகை ஒன்றே இங்கு
பெருநாள் என்பதை நினைவூட்டும்
எஞ்சிய நேரங்களோ தாய்மண்ணின்
நிகழ்ச்சி நிரல்களை மனதிலே  
நிழலாட செய்யும்

பெருநாள் தொழுகை முடிந்து
களைகட்டும் வீட்டுத்தெருக்களும்
சிறுசுகளின் பெருநாள் பணச்சண்டைகளும்
உறவுகளின் சந்திப்புக்களும்
நம்மை விட்டு பிரிந்த உறவுகளின்
கபுரடி தரிசனங்களும்
மனக்கன்முன்னே வந்து
விழிகளை குளமக்கிச்செல்லும்

வீட்டிலே உறவுகள் புடைசூழ
பிஞ்சுகள் மடியிலே புரண்டுவர
உண்ணும் பெருநாள் உணவை நினைக்கையிலே
இங்கு கடை புரியாணி மஞ்சளாய் தெரிகிறது
ஆனால் சுவைக்க மறுக்கிறது

இருந்தும் இறைவன் நாட்டப்படி
அடுத்த பெருநாளிலாவது
உறவுகளோடு ஒன்றுகூடி
உரிமையோடு கொண்டாடும்
உறுதியோடு கழிகிறது இப்பெருநாள்
மீண்டும் ஒருபெருநாள் நெருங்கும் வரை

நிசாம் பாரூக்