Saturday, May 12, 2012

FACEBOOK நீதிமன்றம் பராசக்தி வடிவில்


FACEBOOK... விசித்திரம் நிறைந்த பல UPDATESகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல PROFILEகளையும் சந்தித்து  இருக்கிறது.. ஆனால்,  இந்த PROFILE ஒன்றும் விசித்திரமானதுமல்ல... PROFILEக்கு சொந்தக்காரனான நான் ஒன்றும் FACEBOOKக்கு புதுமையானவனும் அல்ல. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக FAKE PROFILE உருவாக்குபவர்களில் நானும் ஒருத்தி.

போலிப்பெயரிலே ACCOUNT  உருவாக்கி ஆண்களை ஏமாற்றினேன், பெண்களின் பெயரிலே ACCOUNT அமைத்து நல்லவர்களையும் CHECKபன்னியுள்ளேன், பெண் PROFILEகளோடு பேசி SKYPE, YAHOO, MOBILE நம்பர்களை வாங்கியுள்ளேன் இப்படியெல்லாம் POST போடுகிறார்கள் எனக்கெதிராக...

ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுத்து POST போடுவேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை.

போலிப்பெயரிலே ACCOUNT உருவாக்கி ஆண்களை ஏமாற்றினேன்.. ஏன்??? ஆண்களின் வாழ்கையில் விளையாடவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. இவ்வாறு பெண்களிடம் தொடர்ந்தும் ஏமாறக்கூடாது விழிப்பாக இருக்கணும் என்பதற்காக..

பெண்களின் பெயரிலே ACCOUNT அமைத்து நல்லவர்களையும் CHECKபன்னியுள்ளேன் ஏன்..?? நல்லவர்களை கெடுக்கவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. அவர்கள் நல்லவர்கள் என்கின்ற பெயரிலே செய்யும் அபத்தங்களை வெளியில் கொண்டுவருவதற்காக

பெண் PROFILEகளோடு பேசி SKYPE, YAHOO, MOBILE நம்பர்களை வாங்கியுள்ளேன். ஏன்??? இவர்களை எமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை பெண்கள் பெயரிலே இயங்கும் FAKE ACCOUNTகளை கண்டுபிடித்து BLOCK பண்ணுவதற்காக
 
உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் மீண்டும் COMMENT பண்ணுவீர்கள் என்று எனக்கு தெரியும்..
நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன்

சுயநலம் என்பீர்கள்... 

எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது, என்னை ஏமாற்றுப்பேர்வழி ஏமாற்றுப்பேர்வழி என MESSAGE அனுப்புகிறார்கள் எனது ACCOUNTடை BLOCK பண்ண பாக்கிரார்கள், இந்த நல்லவளின் FACEBOOK POSTகளை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய COMMENTகள் எத்தனை, LIKEகள் எத்தனை,  FRIENDகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் கம்பியூட்டர் CLASS கூடப் போனதில்லை ஆனால் FACEBOOK USE பன்னுகின்றேன், நான் மற்றவர்களின் WALLகளிள் மோசமான VIDEO PHOTO இன்னும் என்னென்னமோ எல்லாம் பார்த்திருக்கிறேன் ஆனால் ஒருபோதும் எனது WALLல் அவற்றை POST பண்ணியதேயில்லை.

படியுங்கள் என் கதையை, எனது PAGEசை BLOCK அல்லது CLOSE பண்ணுவதற்கு முன் தயவு செய்து படியுங்கள்.

இலங்கை நாட்டிலே பிறந்தவள் நான், பிறக்க ஒரு வீடு பிழைக்க இன்னுமொரு வீடு, பெண்கள் வாழ்க்கையிலே  நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
COMPUTER எனக்கு ஆர்வமாக இருந்தது பல நல்ல விடயங்களை எனக்கு நெருக்கமாக்கியது

நல்லவிடயங்களை தேடி படிப்பதற்காக நான் இந்த INTERNETடை நோக்கி ஓடோடி வந்தேன் ஆனால் அது என்னை இன்று ஒரு மோசடிக்காரியாக உங்கள் முன் நிறுத்தி இருக்கிறது. இதன் வலையிலே விழுந்தவர்களில் நானும் ஒருத்தி பணத்தை இலந்திருக்கின்றேன் நேரத்தையும் இதிலே வீணாக்கி இருக்கின்றேன் கடைசியிலே INTERNETலே பைத்தியமாக மாறினேன். FACEBOOKகை கண்டேன் ACCOUNT OPEN பண்ணினேன்.

எனது PROFILE பெயரோ மங்களகரமான பெயர் ஆனால் மங்களம் இல்லை இப்பொழுது  மோசமான VIDEOக்கள் ஆபாசமான PHOTOக்களை TAGபண்ணினார்கள்  REMOVE பண்ணினேன் தேடித்தேடி REMOVE பண்ணினேன்... உதவ வந்தார்கள் சிலர் அவர்களும் கடைசியிலே என் காதலை கைமாறாக கேட்டார்கள். 

இதோ என்னை குற்றம் சாட்டி MESSAGEஜும் POSTடும் போடுகிறார்களே இவர்கள் எல்லாம் FAKE PROFILE வைத்து என்னை மடக்க வந்தார்கள் நான் உசாரகிவிட்டேன் இல்லையேல் எனது VIDEO அன்றே INTERNETல் வந்திருக்கும் நான் தற்கொலை செய்யவேண்டி ஏற்பட்டிருக்கும்.
 
நான் மட்டும் நினைத்து இருந்தால் ஜாலியாக CHAT பண்ணி இருக்கலாம் , SKYPE, YAHOO ஊடாக VIDEO CALL பேசியிருக்கலாம், நேரிலே சந்தித்து ஓரமாய் போயிருக்கலாம்

ஆனால் இதை தானா இந்த  உலகம் விரும்புகிறது

நல்லவனாக பேசி என்னை எமாற்றப்பார்த்தார்கள்...... BLOCK பண்ணினேன்...

பெண்கள் போலவே என்னோடு பேசி இறுதியில் ஆண் என கூறி என்னை கவுக்க பார்த்தார்கள்.... BLOCK பண்ணினேன்.... 

தெரிந்தவர்கள் போலவே MESSAGE அனுப்பி என்னை ADD பன்னவைத்து கேர்றேக்ட் பன்னபாத்தார்கள் ...... BLOCK பண்ணினேன்......
 
BLOCK பண்ணினேன்  BLOCK பண்ணினேன் அனைவருமே BLOCK ஆகிவிட்டனர் .... எனது FRIEND LIST காலி ஆகிவிட்டது திரும்பி புதிய பெயரிலே ACCOUNT OPENபன்னிவிட்டேன்

நான் BLOCK பண்ணுவதை நிறுத்தி இருக்க வேண்டும்,  இவ்வாறு ஏமாற்றும் ACCOUNTகளை போக்கி இருக்க வேண்டும், என்னோடு உண்மையை பேசியிருக்க வேண்டும் இன்று எனக்கெதிராக POST மற்றும் MESSAGE  பண்ணுபவர்கள் இதை செய்தார்களா???????

 போலி PROFILEளை நம்பி ஏமாந்தது யார் குற்றம்??  எனது குற்றாமா?  பெண் பெயரில் PROFILEகளை கண்டவுடன் பின்னால் அலைந்து நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நல்லவர்களாக நடிப்பவர்களை கண்டுபிடித்தது நாரவைத்தது யார் குற்றம்? என் குற்றமா? வெளியிலே நல்லவனை போல நடித்துக்கொண்டு FACEBOOKகிலே ஏமாற்றித்திரியும் கயவர்களின் குற்றமா?

பெண் PROFILEகளோடு பேசி SKYPE, YAHOO, MOBILE நம்பர்களை வாங்கி பெண்களா என்று CHECK பண்ணியது என் குற்றமா? பெண்கள் பெயரிலும் ஏமாற்றும் ஆண்களின் குற்றமா?

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற  குற்றவாளிகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

 குறிப்பு:-  இது ஒரு நகைச்சுவை விருந்தாக இருந்தாலும் இதன்மூலம் இன்றைய பாசெபூக் உலகில் நிகழ்கின்ற நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன் ஆகாவே இதுகுறித்து அனைவரும் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கின்ற தகவலையும் பதிய ஆசைப்படுகின்றேன்

No comments: