Tuesday, April 24, 2012

முஸ்லிம்களின் உணர்வை கொச்சைப்படுத்தும் ஹிஸ்புல்லா


அஸ்ஸலாமு அழைக்கும்
தம்புள்ளை மஸ்ஜித் தாக்கப்பட்ட விடயம் குறித்து சகோதரர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள கருத்து ஈமானுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆத்திரமூட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை இவர் இந்த நிகழ்வு தொடர்பாக ஆரம்பம் முதலே அலட்சியமான கருத்துக்களையே விட்டு வருகின்றார் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் மனநிலையை புரியாமலும் அவர்களை இன்னும் கொச்சைப்படுத்துமுகமாகவே இவரது அறிக்கைகளும் செயல்களும் உள்ளது.

இந்த மஸ்ஜித் வேறு ஒரு இடத்துக்கு மாற்றப்படுவதை ஆதரித்தும் அது சிறந்ததே என்றும் முதலில் அறிக்கைவிட்ட இவர் இங்கு எமது உரிமை பாதிக்கப்பட்டதையும் இதனை அனுமதித்தால் நாடுபூராகவும் இது தொடரும் என்கின்ற விடயத்தையும் பேச மறந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து இந்த அநியாயத்தை நிகழ்த்திய அவோக்கியர்களிடமே சென்று “ அனே ஹமுதுரனே ஒபதுமலா பள்ளியாட கிசிம ஹானியக் நோவனவிடியே தமாய் கேசிரில திஎன்னே மாந்திய பொரு பிரச்சார காரல தியன்னே” என்று கூறுமளவுக்கு இவரது மனநிலை மாறியுள்ளது கிட்டத்தட்ட 65 வருடம் பழமையான மஸ்ஜிதில் ஜும்மா தொழுகை உட்பட 5 நேர தொழுகைகள் தொலப்படாதது இவருக்கு இழப்பாக தெரிய வில்லை போலும் அத்துடன் அந்த காடையர்களின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளும் செயல்களும் இவருக்கு புகலாரமாக தெரிந்திருக்கின்றது போலும்.

அனைத்து தலைவர்களும் ஒருமித்து எத்ர்க்கும் சமயத்தில் இவரது அறிக்கைகள் முஸ்லிம் மக்களை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.

இதேசமயம் இந்த மஸ்ஜிதை இடமாற்றுவதனால் எந்த தவறும் இல்லை இதனை மாற்றுங்கள் என்று ஜனாதிபதிக்கு எங்களில் ஒருவரே கூறியிருக்கிறார் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஆசாத் சாலி சக்தி டிவி  மின்னல் நிகழ்ச்சியில் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது

Nizam Farook  கட்டாரில் இருந்து.

No comments: