Saturday, October 22, 2011

தாயே உனக்காக


-->
உயிர் தந்த உறவே
உலகிலுள்ள உன்னத உயிரேநீ
உயிர் ஜீவி அனைத்துக்கும் பொதுவே
அதுவே தாய்மையெனும் உறவே

தாய்பற்றி பாடவேண்டும்
தரமான உயிர் அவளென்று
உலகத்தார் உணரவேண்டும்
இவ்வுலகில் அவள் புகலுயர வேண்டும்
பார்போற்றும் பிள்ளைவேண்டும்
பக்குவமாய் படிக்கவேண்டும்
பணிவாக நடக்கவேண்டும்
என்கின்ற பலநூரு
எதிர்பார்ப்போடு பெற்றெடுத்த
என் தெய்வமே

ஆட்சி மாறும்போது
தடம்புரளும் அரச
ஊடகம் போல
உன்கணவாய் என்னுருவமே
இல்லாதுபோக
என்னையே உங்கணவாய்
ஏற்றுக்கொண்டாய்

என்னை நீ பெற்றெடுத்தாய்
உன்னை நீ விட்டுக்கொடுத்தாய்
நிஜமாக நானிருக்க
-->
நிழலாக நீ தொடர்ந்தாய்


உறவாலே உயிர்தந்தாய்
உள்ளம் நிறைய வலிதந்தேன்
உன்னாமால் உணவளித்தாய்
உதறிவிட்டு ஓடிவிட்டேன்
காய்ச்சல் தலைவலி
தனக்கு வந்தாலும் துடிக்காத நீ
தன் பிள்ளைக்கு தடிமன் என்றாலே
துவண்டு போகின்றாய்

உன்னன்பை உரைப்பதேன்பது
கடல் நீரளக்க
உள்ளங்கையை பிடிக்கும்
மடமை போல் ஆனது

பெற்றெடுத்த அன்னை
நீ பக்குவமாய் என்னை
வாழவைத்ததட்க்காய் உன்னை
வாழும் வரையும் இம்மண்ணில்
பொக்கிசமாய் காத்தருள
வேண்டுகிறேன் வல்லோன் அவனை

நிலா ஒளியில்அந்த
நீல வானம்
நிம்மதியான நேரம்
ஒன்றுகூடி உளற வேண்டும்
உன்மடியில் நான் உறங்க வேண்டும்
தலைகோதி நீ என்னை
தாலாட்ட வேண்டும்

உனக்கு நான் அடிபணிய வேண்டும்
உள்ளம் நிறைய பணிபுரிய வேண்டும்
என்மடியில் நீ உறங்கிட வேண்டும்
உயிர் பிரியும் வரையும்
என்னோடே நீ இருந்திட வேண்டும்
சொர்க்கத்திலும் அன்னையாய்
-->உன்னை நான் அடைந்திட வேண்டும்

No comments: