Wednesday, October 12, 2011

பாராட்டும் மூத்தவர்களின் பொறுப்பும்

நாம் ஒருவேலையை சிறப்பாக அல்லது பல சிரமங்களுக்கு மத்தியில் செய்கின்றோம் என்றால் அதனால் நாம் அடைகின்ற பலன் எவ்வளவுதான் உயர்ந்ததாக இருந்தாலும் மனிதன் என்கின்றவகையில் அவன் இன்னும் ஒன்றை எதிர்பார்க்கின்றான் அதுதான் பாராட்டு. இங்கு பாராட்டுபவர்கள் இரண்டு பிரிவினர்களாக கருதலாம். ஒன்று பாராட்டப்படும் செயலிலே ஆர்வமுடையவர்கள் ஆனால் அனுபவம் இல்லாதவர்களின் (துறைசாராதவர்களின்) பாராட்டு. மற்றயது அதே துறையில் தேர்ச்சியடைந்தோரின் பாராட்டு.
ஆனால் உண்மையிலையே இன்றைய சமுகத்தில் இப்படியான பாராட்டுகள் உரியமுறையில் கிடைக்கின்றதா என்று ஆராயும் பொழுது நான் மேலே கூறியது போல அந்த துறை சாராதவர்களின் பாராட்டுக்கள் அளவுக்கு அதிகமாகவே கிடைக்கின்றது எனலாம். இதன் மூலம் மனிதன் ஓரளவுக்கேனும் திருப்தியடைந்தாலும், இரண்டாவது பிரிவாக கூறப்படும் அதே துறையில் தேர்ச்சி பெற்றவர்களினால் பாராட்டுகள் அல்லது ஊக்குவிப்பு கிடைக்கின்றதா என்று பார்க்கும் போது எதிர்பார்த்த அளவில் இல்லை என்றே கூறவேண்டி இருக்கிறது.
இங்கு தேர்ச்சி பெற்றவர்களுடைய கண்ணோட்டத்தில் இளையவர்களின் செயல்கள் அட்பமாகவோ அல்லது தவறுகள் நிறைந்ததகவோ இருக்கலாம். இருப்பினும் அவற்றை உரியமுறையில் சுட்டிகட்டுவதும் தட்டிக்கொடுப்பதும் அவர்களின் பொறுப்பாகவே இருக்கின்றது. ஆனால் இன்று பலர் இவற்றை தனது பொறுப்பாகவே கருதுவதில்லை மேலும் இளையவர்களின் செயல்கள் நாம் பாரட்டுவதட்கோ அல்லது கருத்து தெரிவிக்கும் அளவிற்கோ தகுதியுடையதல்ல அல்லது தனது தகுதி குறைந்துவிடும் என்று கருதுகின்றனர். இம்மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திலே இன்றைய அநேகமான பெரியவர்கள் இருக்கின்றனர்.
இளம் சாதனையாளர்கள் அத்துறையில் தேர்ச்சிபெற்றவர்களின் அபிப்பிராயங்களையும் அவர்கள் தன்னில் காண்கின்ற பிழைகளையும் சுட்டிகட்டவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். இந்த தேர்ச்சிபெற்றவர்களும் ஆரம்பகாலத்தில் இதே மனநிலையில் தான் இருந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முதியவர்கள் இதனை புறக்கணிக்கும் பொழுது இளையவர்களின் இடுபாடும் ஆர்வமும் குறைந்துவிடும் அபாயம் இன்று காணப்படுவதுடன் இதனால் அந்தந்த துறைகளின் வளர்ச்சியும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றது.
இந்நிலை இன்று எல்லாத்துறைகளிலும் காணப்படுகின்றது. உதாரனத்திட்காக கல்வித்துறை, இலக்கியத்துறை, தொழில் நிறுவனங்கள், விளையாட்டுத்துறை என கூறிக்கொண்டே போகலாம். இந்நிலையை மாற்றுவதற்காக உரியவர்கள் மனம் திறந்து மற்றவர்களை பாராட்டுவதுடன் அவர்களின் குறைகளை உரியவிதத்தில் எடுத்து கூறுவது தனது முக்கியமான பொறுப்பாக கருதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

1 comment:

பி.அமல்ராஜ் said...

வணக்கம் பாரூக். முதலில், இன்றுதான் உங்கள் வலைப்பூவை தருசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அழகாக மற்றும் பல விடயங்களை தாங்கி இருக்கிறது. வாழ்த்துக்கள்.

நீங்கள் பேசும் விடயம், இலக்கியத்துறையில் இன்னும் கேவலம். அதாவது விரல் விட்டு சொல்லக்கூடிய ஒரு சில பெரியவர்களை தவிர வேறு எவரிற்கும் இளையவர்களை தட்டிக்கொடுக்கும் மனநிலை சுத்தமாக இல்லை. இதற்கு நீங்கள் கூறும் காரணங்களுடன் தங்களை இவர்கள் மிஞ்சி விடுவார்கள் என்பதும் ஒரு முக்கியமான காரணம். பெரியவர்கள் என்பதால் தவறுகளையும் நாம் கண்டுகொள்ளுவதில்லை. அவ்வளவுதான். உங்கள் பதிவு அருமை.