Saturday, November 19, 2011

என் தந்தை

ஆறுதலாய் நீ இருந்தாய்
அழகான பலகோடி
கனவுகளும் நீ தந்தாய்
கச்சிதமாய் வாழும்
கலையினையும் கற்றுத்தந்தாய்

காரிருளை அகற்றும் அந்த
கதிரவனையும் நீ வென்றாய்
கடமைக்காய் அவ்விருலிலே நீ நடந்தாய்
கடமைமுடிந்து திரும்பும் உன்னை
அடிவாநிளிருந்த அந்த
கதிரவனே கண்டு வியந்தான்

தன்துயர் மறைத்து
தவறாது நீ உழைத்து
தன்குடும்பன்தனை காத்து
ஊரார் மத்தியில் உயர்த்து வாழ
மருவுலகிலும் மகத்துவம் பெற்றிட
உன்னை நீ அர்ப்பணித்து
எம்மை நீ வளர்த்தாய்

கொடிய வறுமையிலும்
கொட்டிய அந்த செளுமையிலும்
கொள்கையோடு நீ இருந்தாய்
அந்த கொள்கையின் உறுதியிளே
உன்பிள்ளைகளையும் உருவாக்கினாய்

தயக்கமே இன்றி உன்
தவறுகளை ஏற்றுக்கொள்வாய்
தவரியவர்களையும் தட்டிக்கேட்பாய்
தப்பு செய்பவனையும் எதிர்த்து நிற்பாய்
அவ்வண்ணமே எம்மையும் வார்த்தேடுத்தாய்

உன்னுடல் வருந்தினாலும்
உன்பிள்ளை சிரிப்பில்
சுகம் கண்ட நீ
என்னுடல் வருந்தாமலே
வாழ வழிவகுத்த தந்தாய்

பலகோடி பாடுபட்டு
பக்குவமாய் கரை சேர்த்து விட்டு
பாரினிலே நாம்
தடம்பதிக்கும் போது
தவறிவிட்டாய்
நீ எம்மை பிரிந்துவிட்டாய்

உன்கனவு நனவானது
என்னினைவு கனவானது
கடமையையும் தாண்டி
காரியம் செய்தாய் நீ
இருந்தும்
உனக்காக என்ன புரிந்தான்
இந்த பாவி இப்புமியிலே

இறையடி சேர்ந்த உனக்காக
இரஞ்சுகின்றேன்
சுவனத்தையே பரிசாக
வேண்டுகின்றேன்
அங்கும் உன்னைக்காண
நாடுகின்றேன்
அதற்காகவே இன்று
உயிர் வாழுகின்றேன்

No comments: