Saturday, October 8, 2011

மாரிவிடதே பெண்ணே மறுபடியும்

காதல் செய்ய நினைக்கையிலே

கண்மணியே உன்னுருவம்
கண்னெதிரே தோன்றுதடி

களைந்து விட்ட காதலினை
கனவாக நினைக்கையிலே
கண்ணிரண்டும் கலங்குதடி

கணணியும் கைபேசியும்
மறைத்து வைத்த
உன் திரையை
மனம் நிறைய பார்த்துவிட்டு
முத்தமிட்டு
தொட்டுக்கொள்ளும்
மகத்தான அந்த காதல்
மனநிறைவை தந்ததடி

வேப்பமரத்தடியும்
வெறிச்சோடிய அந்தத் தெருவும்
மாம்பழம் அன்னாசி கடலை என
விற்றுத்திரிந்த முதியவரும்
மூவாண்டு இடைவெளியில்
மறக்காத நம் காதலை
காதலியே நீ மறந்தது ஏனடி

எதிரிகள் இல்லாத
இக்காதல் ஈராண்டுகளின் பின்
எதிர்மறையாய் போனதும்
எதிரியாய் உன்வீட்டார் ஆனதும்
ஏமாற்றமாய் இருந்ததடி

அவர்கள் மனம் வென்று
நான் உன்னை மணக்க
நாம் பட்ட பாடெல்லாம்
பாழாகிப்போனதடி

நீ கைபிடித்தால் - நான்
உயிர்த்துறப்பேன் என்கின்ற
பெற்றோருக்கும் மத்தியில்
குற்றுயிராய் நீ கிடந்ததும்
அதை என்னிடம் மறைத்ததும் ஏனடி

விளங்காத இப்பனமும்
வீரென்று வந்த அக்காரும்
கார்கதவு திறந்த சுந்தரும்
கணவாய் ஆனதே உன் தெய்வங்களுக்கு

முற்றிப்போன பிரச்சனையில்
முடிவொன்று நீ எடுத்தாய்
மாறிவிட்டாய் நீ மாறிவிட்டாய்
காதலையும் மாற்றிவிட்டாய்
என்னையும் மறந்துவிட்டாய்

நட்பாய் உருவெடுத்த நம்முறவு
தப்பாய் மாறியதோ காதலாய்
புரிந்துணர்வோடு இருந்த பூவே
நீ இடம்மாறி பூக்க சம்மதித்தது
புழக்கத்திலுள்ள பணத்தினாலேயே

கண்ணெதிரிலே நான்
கண்டேன் கடைத்தெருவிலே
உன்னை
கல்லாகிப்போனேன் - நீ
கொஞ்சும் அழகினிலே
அவனை
இல்லை
துளியளவேனும் கவலை
உன்மனதிலே
காரணம் அவனது பணம்
காதலுக்கு அவனிட்ட முளதானம்

இதற்காய் உயிர் துறக்க
நானொன்றும் மடயனுமில்லை
ஒடிந்து விழுமலவிட்கு
கோழையுமில்லை - இருந்தும்
எரிகின்றது என்காயம்
ஊதுகின்றேன் அணைப்பதற்கு
தேறிவிடும் அக்காயம்
என்கின்ற நம்பிக்கையில்
மாரிவிடதே பெண்ணே மறுபடியும்

No comments: