Wednesday, February 22, 2012

விடியலை காணும் கனவுடன்



புகை மூட்டமாக
இருந்த
இனப்போர்
புதைகுழிகளினுள்ளே
புதைக்கப்பட்டது
இருந்தும்
இன்னுமா அதனால்
எஞ்சும் பணத்தை
தொலைக்கிறார்கள்

வெடிகுண்டு கலாச்சாரம்
முடிந்ததாய் சொல்லும்
அரசாங்கம்
மக்கள் மடியில்
விலை குண்டை அல்லவா
சுமத்துகின்றது

தேசத்தை கட்டியெழுப்ப
வெட்டியெடுக்கும்
வெளிநாட்டு
கடன் குழிகள் கூட
நம்மை முண்டியடித்து
மூடிவிடும் போலுள்ளதே

அபிவிருத்தி
என்கின்ற பெயரில்
பாதைகள் ஏதோ
அழகாகின்றது
அதைவிட பன்மடங்கு
வேகத்தில்
பரம்பரைக்கே
சொத்துக்கள்
சேர்க்கப்படுகின்றதே

மக்கள் மாக்களாய்
மடிந்தபின்
இவர்கள் பாதைகளை
அபிவிருத்தி செய்து
என்ன
வேற்றுக்கிரக வாசிகளுக்கு
விற்க போகிறார்களா
இல்லை
சந்திரனிலும் தனக்காக
சொத்து சேர்க்க
பார்க்கிறார்களா

இந்த இருளில்
இருந்தாடியே
முனுமுனுக்கின்றோம்
இருளாய் இருந்தாலும்
பரவாயில்லை
கண்களையும் பரித்துவிடதே
என்றாவது ஒருநாள்
விடியலை காணலாம்
என்கின்ற
கனவுடனேனும்
வாழ்ந்து மடியும் வரை

Saturday, February 11, 2012

அநாகரீகமான நாகரீகம்

கலாச்சார சீர்கேட்டில்
கன்னியரும்
காளையரும்
கலந்து ஒன்றுகூடி
சீரளைவதில்
சிறப்பான நாள்

தெரு ஓரங்களிலும்
திரையரங்குகளிலும்
உல்லாச அரைகளிலும்
உல்லாசமாக
கொண்டாடுவதற்கு
அலைமோதும்
இருளடைந்த நாள்

ஒழுக்கம் பேசும்
எம்மினத்தாரும்
தவறாது
உறவாட
ஒருத்தியை அல்லது
ஒருத்தனை
தேடுமலவுக்கு
பண்பிளக்கும்
பயங்கரமான நாள்

காதல் என்று
காமத்தை
அரங்கேற்றுவதட்கு
அங்கீகரிக்கப்பட்ட
ஒருநாள்
திருவிழா

ஒரு நாளைக்கு
ஒருத்தனோடு
வாழும் அந்த
ஒழுக்கமற்ற
மேலைத்தேயத்தின்
இறக்குமதியில்
சிக்குற்று
சிதைந்து போனது
எம் சமுகம்

பண்பும்
பாசமும்
ஒழுக்கமும்
விழுப்பமும்
நிறைந்த சமுகம் நாம்
இன்று நடுத்தேருவிலே
அநாகரீகமான
நாகரிகத்தை செய்கின்றோம்

காதலர் தினமே
தன் மனைவியை
தன் கணவனை
மட்டுமே காதலிக்கும்
கலாச்சாரம்
கொண்டவர்கள் நாம்
அந்த காதலுக்கு
தினம் தேவையில்லை
இவ்வாறு சிரளியவும்
நான் தயாரில்லை
என்று கூறும்
உறுதி பெறுவோம்

Wednesday, February 8, 2012

காதல்

தெரிந்தது போலவே
நோக்கினாள்
புன்னைத்தாள்
சட்டென சென்று
பட்டென கேட்டேன்
பாவை நீ யாரென

பண்பாக பேசினாள்
பணிவாக சொன்னாள்
உயர்ந்து பார்த்தேன்
நல்லவனாய்
கண்டேன் உன்னை
என்றுரைத்தால்

நாடி நாளங்களில்
ஓடுகின்ற
இரத்தமும்
உறைந்து போனது
இவள் சொல் கேட்டு

பார்ப்பவருக்கெல்லாம்
பயங்கரமாய்
இருந்த நான்
உன் கண்ணுக்கு
பண்பாலனாய்
விளங்கியது
யார் செய்த
அருளோ
ஆடியே போனேன்

கண்கள் பேசுவதை
கண்களாலே உணர்ந்தேன்
ஆனால்
வாய்கள் ஏனோ
மெளனித்து போனது

கல்லாய் இருந்த
என்னிதயத்தில்
எறும்பு ஊறுவது
போல
உணர்ந்தேன்

இதய துடிப்பிலும்
வித்தியாசம் கண்டோம்
இதயங்கள்
மாறியிருப்பதை
பின் விளங்கிகொண்டோம்

புது இதயமே
புத்துனர்வாய்
இருக்கிறது – அதனாலேயே
இந்த புது
உறவும் பூக்கிறது
என
மகிழ்ச்சி கொண்டோம்

இனம்புரியாத
உறவொன்று
உருவானதாய்
உணர்கின்றோம்- அதை
உரைப்பதட்கோ
வழியின்றி உருகுகின்றோம்

கண்களால் சொல்லிக்கொண்ட
நம் காதலை
வாய் திறந்து சொல்லி
முறைப்படி கைபிடிக்க
முறையாகவே
முயல்கின்றேன்

NOTE :எனது கவிதையில் சீரழிந்த இந்த காதலர் தினத்தை ஆதரிப்பதாக இருந்ததை எனது நண்பர்கள் பலர் சுட்டிக்கட்டியதன் பின் அந்த கவிதையில் சில மாற்றங்களை செய்துள்ளேன் அத்துடன் சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றியையும் அத்தவருக்காக உங்கள் அனைவரிடம் மன்னிப்பையும் வேண்டி நிற்கின்றேன்