Friday, September 30, 2011

சுருங்கிப்போன உறவுகள்

பாரினிலே உறவாடும் உறவுகளே
பக்குவமின்றி நீ போன பதையினிலே
பதறாது திரும்பி பார்க்கையிலே
பலவாறு திரிபடைந்த இருக்கிறதே

உரிமையோடு சேர்ந்து நின்ற சொந்தங்களே
உங்கள் உயிரான உணர்வுகள் - என்ன
ஈழத்து போரில் இருளடைந்து போனதா - இல்லை
மேலைத்தேய மோகத்தில் இயந்திரமாய் ஆனதா

பாட்டியின் மூட்டுவலி கேட்டுநிட்க யாருமில்லை
பேரனுக்கு போர்க்கதை சொல்லித்தர பாட்டனுக்கு நேரமில்லை
இரத்தமுள்ள இயந்திரமாய் மாறிவிட்டான் இந்த மனிதன் - இதனலையோ
உணரக்கூடிய இயந்திரத்தையும் உருவாக்கி தந்தான்

புதிதாய் பூத்த உறவுகள் உயர்ந்து நிற்கும்
பூர்விகமாய் வந்த உறவுகள் உதிந்து போகும்
நட்புலகம் நடுவிலே நிலையற்று தொடரும்
இதற்கெல்லாம் காரணம் - இன்னும் நீ
உணரவில்லை உறவின் முக்கியம்
அடையவில்லை அதிலே பக்குவம்

அன்று, அத்தை மடி மெத்தை என பேச்சு - இன்று
அத்தை மாமன் சொத்தையாய் போச்சு
நாத்தனார் கொழுந்தனார் நெடு தூரமாச்சு
பட்டனும் பூட்டியும் கண்டு பல்லாண்டாச்சி
அங்கல், ஆண்டி என்று மொத்தஉறவும் முடிஞ்சு போச்சு
இறுதியாய் இந்த வாக்குமூலமே அனைவரதும் மூச்சு

உறவுகள் என்பது வெறும் வேஷம்
உணர்ந்ததி விட்டது உங்கள் நேசம்
நம்பியதால் அடைந்தோம் நாசம்
தாயிடம் மட்டுமே உண்டு பாசம்

இதுவே இங்கு முக்கியம்
மாறவேண்டும் அந்த வேஷம் சத்தியம்.

No comments: