Sunday, May 20, 2012

கேள்விக்குறியாகும் முஸ்லீம்களின் எதிர்காலம்

அண்மைக்காலமாக முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான கெடுபிடிகள்  அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அனுராதபுர தர்கா ஒன்று இடிக்கப்பட்டதும் தம்புள்ளை ஜும்மா பள்ளி தாக்கப்பட்டதும் முஸ்லீம்களின் மனநிலையை பெரிதும் பாதித்த நிகழ்வுகளாக இருக்கின்ற நிலையில் இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன என்கின்ற பேச்சுக்களும் கசிந்தவன்னமே இருக்கின்றது, இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு சம்பவம் குருணாகல் மாவட்டத்திலும் நிகழ்ந்திருப்பது அனைவரும் அறிந்த விடயமே 

இங்கு நடைபெறுகின்ற இந்த நிகழ்வுகளை பார்க்கின்ற பொது இது ஒரு பாரிய இனச்சுத்திகரிப்பிட்கான ஒரு ஆரம்பமாக கருதவேண்டி இருக்கிறது. இன்று நாட்டின் எல்லா பாகங்களிலும் இஸ்லாமிய மதானுச்ட்டானங்கள் நடைபெறுகின்ற இடங்கள் பேரினவாத சக்திகளினால் கண்கானிக்கப்படுகிரதுடன் அப்படியான இடங்கள் சம்பந்தமான சட்டரீதியான அனுமதிகள் மற்றும் சட்டத்தினால் இவ்வாறான இடங்களை முடக்குவதற்கான வழிகள் இருக்கின்றனவா என்கின்ற பல விடயங்கள் கண்கானிக்கப்படுவதாக பல தகவல்கள் கசிகின்றது.


அத்துடன் இனத்துவேசத்தை வெளிக்காட்டும் விதமாகவும் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் கருத்துக்கள் அடங்கிய இணையத்தளங்களும் பேஸ்புக் போன்ற சமுகவளையமைப்புக்களிலே பல கணக்குகளும் எமது நாட்டிலிருந்து இயங்குகின்றான இதுமாற்றுமின்ரி ஆங்காங்கே பல துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டு வருகின்றது 


இப்படியான ஒரு திட்டமிடப்பட்டு நகர்த்தப்படும் செயல்களை இன்னமும் எமது சமுகம் கண்டுகொள்ளாமல் இருபது மிகவும் கவலைக்குரிய விடயமாக உள்ளது ஒரு அடக்குமுறை நிகழ்கின்ற பொது ஆவேசப்படும் எமது சமுகம் மிக விரையில் அவற்றை மறந்துவிடுவதுடன் அவ்வாறான பிரச்சனை எதிர்காலத்தில் வருமேயானால் முகம்கொடுக்கும் வழிமுறைகள் பற்றி சிந்திப்பது குறைவாகவே இருக்கின்றது 


தம்புள்ளை பள்ளி விவகாரத்தின் போது கூட எமது அதிகமான அரசியல் தலைமைகளும் மதத்தலைவர்களும் ஒன்றுபட்டு செயற்பட்ட போதிலும் சிலநாட்களின் பின் அவர்களின் கருத்துக்களை பார்கின்ற பொது  இவர்களிடையே பிளவுகள் காணப்படுகின்றது என்பதும் இவர்களுக்கிடையே ஒரு சிறந்த தொடர்பாடல் காணப்படவில்லை என்பதையும் அனைவரினாலும் உணர முடிந்தது.


இப்படியான ஒரு சூழலில் எமது எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலையில் இருக்கின்றமையால் அனைத்து முஸ்லீம் கட்ச்சிகளும் அனைத்து மத இயக்கங்களும் உள்ளடங்குகின்ற விதத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கிடையே ஏகோபித்த ஒரு தலைவரை நியமித்து இப்படியான சதித்திட்டகளை முறியடிக்க கூடியவிதத்தில் எங்களை நாம் தாயார் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் தள்ளப்பட்டுள்ளோம் அத்துடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இவ்விடயத்தில் மிக பொறுப்புடன் செயற்பட்டு அனைவரையும் ஒன்றுசேர்க்கும் விடயத்தில் முன்முரமாக இயங்கவேண்டும் எனவும் கருதுகின்றேன்

(கட்டாரில் இருந்து நிசாம் பாரூக்)

No comments: