Thursday, May 24, 2012

இன்பக்களிப்பினிலே........

இன்பம் தேடும் மானிடா
உந்தன் இன்பக்களிப்புக்கு நீ
கொடுக்கும் வரையறை ஏதடா??

கொள்ளுப்பாட்டி முதல்
கொஞ்சும் குழந்தைவரை
அடைய நினைப்பது மகிழ்ச்சியடா
மானிடா
மண்ணிலுள்ளவரை
அனைவரினதும் முயற்ச்சியிதுவடா

காதல் கொள்ளும் இளசுகளின்
இன்ப களிப்பினிலே
வெறுப்படையும்
மூத்தோருமுண்டடா

குழந்தையாய் மாறி
பிஞ்சுகளுடன்
சண்டையிடும்
முதியோரின்
இன்பகளிப்பினிலே
வெறுப்படையும்  
பிஞ்சுகளும் உண்டடா

தென்னம் பட்டையினாலே
தெவுட்டுகின்ர உச்சிவெயிளினிலே
கிரிக்கெட்டாடும் பிள்ளைகளின்  
இன்ப களிப்பினிலே
கோவமுரும் பெற்றோருமுண்டடா

பந்தையக்குதிரை போல
பண்ப்படுத்தி
பரிட்ச்சையிலே பாயவைத்து
மாருதட்டும் பெற்றோரின்
இன்பக்களிப்பினிலே
கோவமுரும் பிள்ளைகளும் உண்டடா

கூறடா மானிடா
உன் இன் களிப்புக்கு
இரையாவது யாரடா???

ஒருவர் இன்பத்தினிலே  
மற்றவர் துன்பத்தினிலே
மகிழ்ச்சியோளி மனதில் விழ
மனநிலையும் மாறிடுதே  
சூழ்ச்சியினால் இன்பமமுரும்
சூழ்நிலையும் பெருகிடுதே

பிறருக்கு பீடையாயின்ரி  
தவறுகளுக்கு தடையாயிருந்து 
தரணியிலே
தரமாக உழைத்திடுவோம்
அந்த இன் பக்களிப்பினிலே
இவ்வுலகை கடத்திடுவோம்.





குறிப்பு  24.05.2012 லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான எனது கவிதை குரல்கொடுப்பவர் ஷைபா மலீக்

No comments: