Friday, September 30, 2011

சுருங்கிப்போன உறவுகள்

பாரினிலே உறவாடும் உறவுகளே
பக்குவமின்றி நீ போன பதையினிலே
பதறாது திரும்பி பார்க்கையிலே
பலவாறு திரிபடைந்த இருக்கிறதே

உரிமையோடு சேர்ந்து நின்ற சொந்தங்களே
உங்கள் உயிரான உணர்வுகள் - என்ன
ஈழத்து போரில் இருளடைந்து போனதா - இல்லை
மேலைத்தேய மோகத்தில் இயந்திரமாய் ஆனதா

பாட்டியின் மூட்டுவலி கேட்டுநிட்க யாருமில்லை
பேரனுக்கு போர்க்கதை சொல்லித்தர பாட்டனுக்கு நேரமில்லை
இரத்தமுள்ள இயந்திரமாய் மாறிவிட்டான் இந்த மனிதன் - இதனலையோ
உணரக்கூடிய இயந்திரத்தையும் உருவாக்கி தந்தான்

புதிதாய் பூத்த உறவுகள் உயர்ந்து நிற்கும்
பூர்விகமாய் வந்த உறவுகள் உதிந்து போகும்
நட்புலகம் நடுவிலே நிலையற்று தொடரும்
இதற்கெல்லாம் காரணம் - இன்னும் நீ
உணரவில்லை உறவின் முக்கியம்
அடையவில்லை அதிலே பக்குவம்

அன்று, அத்தை மடி மெத்தை என பேச்சு - இன்று
அத்தை மாமன் சொத்தையாய் போச்சு
நாத்தனார் கொழுந்தனார் நெடு தூரமாச்சு
பட்டனும் பூட்டியும் கண்டு பல்லாண்டாச்சி
அங்கல், ஆண்டி என்று மொத்தஉறவும் முடிஞ்சு போச்சு
இறுதியாய் இந்த வாக்குமூலமே அனைவரதும் மூச்சு

உறவுகள் என்பது வெறும் வேஷம்
உணர்ந்ததி விட்டது உங்கள் நேசம்
நம்பியதால் அடைந்தோம் நாசம்
தாயிடம் மட்டுமே உண்டு பாசம்

இதுவே இங்கு முக்கியம்
மாறவேண்டும் அந்த வேஷம் சத்தியம்.

Tuesday, September 27, 2011

மானக்கேட்டவனே.....


கவனிப்பார் இல்லாத சியரத்தில் கைவைத்து
கண்ணியமாக வாழ்ந்த இரு சமுகத்தில்
களங்கத்தை ஏற்படுத்தி
மகத்தான ஹீரோவாக மாற நினைத்த
மானக்கேட்டவனே.....

நீ நினைத்தது ஒன்றும் நட்டக்காது
நிம்மதி இழந்து இப்பூமி செழிக்காது
வரலாறு தெரியாது நீ துடிக்காதே
வஞ்சகத்தொடு அதை மறைக்க நினைக்காதே

புத்த தர்மம் தெரியாத பேக்கு
உன்னால் அந்த தர்மத்துக்கே இழுக்கு
புரியாமல் உன்னோடு சேர்ந்தவர்கள் வெறும் மக்கு
இதனை எல்லோருக்கும் புரியவைக்க வேண்டும் நல்ல பிக்கு

வெறி பிடித்தவர்கள் மனது நெகிழ
இறைவேதப்படி வாழ்க்கை மலர
இணைவைப்பு இன்றியே தொடர
சந்தோசமாய் அனைவரும் மகிழ
நாடு நன்றாய் முன்னோக்கி வளர
கையேந்தி நிற்போம் நம் நபி
வழில

Thursday, September 8, 2011

இதுதாங்க உண்மையிலேயே நடக்குறது: "யெஸ் டார்லிங்" "யெஸ் ஹன்னி" என்று தொடருதுங்க.


முன்பு எல்லாம் திருமண பேச்சுவந்தா உர்ருலகத்துலதான் விசாரிச்சு பாத்தாங்க இப்ப மேயினா பாக்குறது எங்க தெரியுமா? பொண்ணா இருந்தாலும் சரி பையனா இருந்தாலும் சரி அவங்க எப்படி facebook ஐ யூஸ் பண்ணுறாங்க என்று பார்த்து கேரெக்டர டிசைட் பன்னுரக !!!!, என்ன க்ளோஸ் பண்ண பார்க்கிறீர்கள் வேண்டாம் வெயிட் வெய்ட்,
நம்ம புள்ளைகள் இந்த இண்டர்நெட்டுல படுகின்ற பாட்ட கொஞ்சம் பருங்களே, முதல்ல பொண்ணுகள பற்றி பார்போமா?
தங்களுக்கு தெரிந்த அல்லது தெரியாத ஏற்கனவே பேசிப்பழகிய அல்லது பேசியே இல்லாத அதைவிட பெயரளவில் மட்டுமே தெரிந்த அதுவும் தெரியாத எல்லா ஆண்களையும் friends add பண்ணிகொல்லுறாங்க. அப்புறம் என்ன "ஹாய்" "ஹலோ" "சலாம்" இன்னும் சிலர் டிசெண்ட "அஸ்ஸலாமு அழைக்கும்" என்று சாட்டிங் தொடங்குது கொஞ்சம் நேரம் தொடர "யெஸ் பேபி" "யெஸ் ஸ்வீடி" இன்னும் "யெஸ் டார்லிங்" "யெஸ் ஹன்னி" இன்னும் பல என்று நல்லா ஸ்மூத்தா போகும்.சிலசமயம் பெஸ்ட் டைம் சட்பன்னுரா பொண்ணுகள் இந்த "யெஸ் பேபி" "யெஸ் ஸ்வீடி" என்று ரிப்ளை வந்ததும் கொஞ்சம் யோசிக்க தொடங்கும் போதே மீண்டும் மறுபுறம் இருந்து "ஹேய் என்ன கொவிச்சிடிகளோ நான் சும்மாதான் சொன்னேன்!!!!" ஓகே ஒடனே சரண்டர் அப்புறம் என்ன கொஞ்சம் கொஞ்சம் டேவேலோப் அகிட்டேபோகும் ஒரு நம்பிக்கையும் வந்துடும் நம்மட இந்த சாட்டிங் வேரயருக்கும் தெரியாது இவன் சொல்லவும் மாட்டான் என்று (இந்த பொண்ணுகளுக்கு தெரியாது மறுபுறம் 4 பிரிஎண்ட்ஸ் பாத்துகிட்டு பாருடா இவள்ட ............. என்று சொல்லுறது ) சாப்புட்டுடின்களா என்று தொடங்கி அப்புறம் என்ன "சும்மா சொல்லுக" "என்ன வெக்கமா" என்று தொடருதுங்க.
அது மட்டுமா ஏற்கனவே படங்கள பார்த்து பார்த்து பாலாய்போன இந்த பொண்ணுகளும் பசங்களும் கொஞ்சமும் வெட்கமில்லாம இரட்டை அர்த்தமுள்ள, அரைகுறை அடையுடனுள்ள பாடல்களையும் படங்களையும் போஸ்ட் பன்னுதுவல் அப்புறம் அதுல ஒரு பெரிய convercation நடக்கும், அப்புறம் பப்ளிக்குல இல்லாம இன்போக்சுல தொடரும் அதுலயும் சில பொண்ணுகள் அந்த இரட்டையருத்த வரிகளை டைப் பண்ணி போட்டுடுதுவல் (என்னா தைரியம்) . இன்னும் சில பசங்க இந்த பொண்ணுகளுக்கு tag பண்ணுவாங்க அது மோசமா இருந்தாலும் இந்த பொண்ணுகள் remove பண்ணுறது இல்லை அல்லது தெரியாது. பிறகு என்ன அதை பார்க்கிற மற்றவங்க அந்த பொண்ணு கொஞ்சம் ஓவர்தான் போகுது இந்த பையன் கொஞ்சம் மோசம்தான் இருக்கிறான் என்று காற்றுல பரப்பிவிடுவங்க இதுதாங்க உண்மையிலேயே நடக்குறது.
அப்புறம் நம்ம பசங்கள் என்ன நல்லவங்களா (நீயும் தானே என்று சொல்லுறமாதிரி இருக்கு கொஞ்சம் பொறுங்கப்பா) இவங்க தேடுறதே யாரு (ச்பெசியாலி girls ) புதுசா facebook யூஸ் பன்னவந்திருக்காக. கண்ணுல மட்டின உடனே request , next messaage மற்றது எல்லாமே முதல்ல சொன்னதிலும் அதிகம் ஓவரா பண்ணுறாங்க.
ஆனால் இன்னும் ஒன்றும் நடக்குது நெறைய பசங்க பொன்னுகளுடைய பெயர்ல அக்கயுன்ட் ஓபன் பண்ணி பொண்ணுகளுக்கு request அனுப்பி அவர்களோட chat பண்ணி "காண்டாக்ட் நம்பர்" இல்லாட்டி "ஸ்கைப்" "யாகூ" வாங்குறது இன்னும் சிலர் பொன்னுகளுடைய பெயர்ல அக்கயுன்ட் ஓபன் பண்ணி chat பண்ணும் பொது நம்மட உண்மையான கேரக்டர பத்தி கொஞ்சம் ஓவரா புகழறது நல்லவரு வல்லவரு என்று சொல்லி அவரோட friends அகிபருங்க என்று சொல்லாம சொல்லுறது அப்புறம் சொல்லவா வேணும்...........
இப்படிதான் நடக்குது, இதுல நாம ரொம்ப ரொம்ப நல்லவங்க என்று நேனைகிரவங்களும் இருக்குறாங்க (நீங்க யாரு அவங்க என்று தேட வேண்டாம் பொருத்தமானவங்க தொப்பிய போட்டுகொல்லட்டும்) என்ன முனுமுனுக்குரிங்க இதெல்லாம் ஓவர் என்கிறமாதிரி தின்க் பன்னுரிகளா?, இல்லங்க இதெல்லாம் சத்தியமா நடந்த நடக்கின்ற உண்மைகள்,
என்ன இந்த நக்கல் சிரிப்பு........ இதுதாங்க இன்றைய உலகம், நாலு நல்லது சொன்ன ஒடனே சொல்லுரவனையே சந்தேகப்படுரிங்க பாருங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மன்னிக்கணும் ஒரு முக்கியமான விசயத்த சொல்ல மறந்துட்டன் எல்லாரும் இப்படி இல்லங்க ஒரு 10% நல்ல (ஆண் , பெண் )facebook யூசரும் இருக்குறாங்க (வேணாம் நான் என்னமாதிரி என்று சொல்ல இல்ல அத நீங்கதானே சொல்லணும் ) அவங்க தெரிந்தவர்களை மட்டும்தான் friends add பண்ணுவாக அல்லது நல்லவங்க என்று 100 % தெரிந்த பின்புதான் add பண்ணுறாங்க நல்ல விசயங்கள மட்டும்தான் போஸ்ட் பண்ணுறாங்க
கடைசியா இவங்கள (நல்ல யூசெர்களா) பரட்டுகின்றதொடு மற்றவங்களையும் கொஞ்சம் மாறும்படி சொல்லிக்கிட்டு நானும் அந்த நல்ல யூசெற தொடர்ந்து இருக்க முயற்ச்சிக்கிறேன் ஓகே நன்றி

Sunday, September 4, 2011

அரபுலகம்



கடலாய் மக்கள் கடற்கரையில்
கன்னியர் பலர் நீர் அலையில்
சிறப்புமிக்க அரபுலகம்
சீரழிந்து போனதில்

கர்வமும் கவர்ச்சியும்
மங்கையும் மதுவும்
அடிமைத்தனம் அடாவடித்தனம்
அடியோடு அழிக்கவந்த
அன்னல்நபியின் அரபுலகம் இது


அனைத்தும் இங்கே
அரங்கேறுகின்றது
அரைகளினுள்ளே
யாவரும் அறிந்த இரகசியமாய்

மதுவுக்கு தடையுண்டாம் இங்கு
மாற்றானுக்கு பெர்மிட்டும் உண்டு ??
பெண்ணுக்கு பெருமையுண்டாம் இங்கு
சில்லரைக்காய் சீரழியும் பெண்களும் உண்டு ??
சட்டங்களும் சட்டப்படி உண்டாம் இங்கு
சட்டை பார்த்து செத்துபோகும் சட்டங்களும் உண்டு ??
பரம்பரை அட்ச்சிதான் நடக்குதாம் இங்கு
பல ஊழல்கள் நடப்பதும் உண்டு ??

இஸ்லாமிய ஆட்ச்சிஎன்று இயம்புகின்றனர் இங்கு
இசையுடன் ஆடும் இடையும்
இடை காணும் உடையும் தாராளமாய் உண்டு ??

இருப்பினும் இதற்கிடையே
அல்லாஹ்வை அஞ்சி இருப்போரும்
அருமை நபி வழி நடப்போரும் பலர் உண்டு!!!!!!

சந்தேகமே இல்லையட
சத்தியமாய் சொல்லுகின்றேன்
பெயர்கூட தெரியாத
பேரழிவு பெற்றிருக்கும்
பெருமானாரின் பிரார்த்தனை
பிரதிபளிக்கவிட்டால்

உண்மையிலேயே
உளறிவிட்டேன் உண்மைகளை
உணர்ந்தவர் பலர் இருப்பார்
இந்த உலகினிலே