Wednesday, August 24, 2011

குற்றம் புரியாத அரசனே

போர் குற்றம்
புரியாத மன்னவனே
உரத்த குரலில்
உரையாற்றும்
உத்தமனே

உன் குடி தவிக்கிறது
உலகமே வியக்கிறது
ஊரெங்கும் பதற்றமாய் இருக்கிறது
அசம்பாவிதங்களும் நடக்கிறது

பயிரை மேயும்
வேலிகளாய்
உன் அடிமைப்படை
அரிக்கைகளோ
வதந்தி என்கிறது

பார்த்த கண்களும்
பிடித்த கைகளும்
உதவிய உன்படையும்
பொய்யாகும் போது
எதிர்த்த மக்கள் மட்டும்
நிஜமானதே

ஓட்டு போட்ட
உத்தமிகள் இன்று
உயிர் பிழைக்க
மருத்துவமனையில்

நாடு காக்கும் அரசனே
உன் அமைதி ஆமோதிப்பது
உன்இரத்த தாகத்தையோ
இல்லையேல்
நாளை ஓட்டு கேட்க
இனவாதம் தேவையோ

நம்பிவிட்டோம் தலைவா
நீ புரியவில்லை
போர்குற்றம்

No comments: