Saturday, November 26, 2011

காதலிலே சிக்குண்டு



இரவினிலே தூங்கும்
போது
தொலைத்தது எந்தன்
இதயமென்று
உணர்ந்துகொண்டேன்

எத்தனையோ
தத்தை கண்டு
தாவாத இந்த இதயம்
பித்தாய் போனதே
உந்தன் முகத்தை கண்டு

தயக்கம் இன்றி
எதையும் சொல்லும்
எந்தன் உள்ளம்
தடுமாறுகின்றது
சொல்ல நினைக்கையிலே
நாவும் செயளிலக்கின்றது

காணத்துடிக்கும் இதயமும்
உன்னை கண்டவுடனே
எண்ணிக்கை மறந்து துடிக்கிறது
இருமடங்கு அடிக்கிறது
அதன் ஓசையே
உந்தன் காதுகளையும்
அடைக்கிறது

சிங்கமாக இருந்த நான்
காதலிலே சிக்குண்டு
சிலந்தி போல் ஆகிவிட்டேன்-இது
சுவர்க்கமா நரகமா என்பதையும்
சீக்கிரமே உணர்ந்துவிட்டேன்

திருடனாக மாற முயற்சிக்கின்றேன்
திருட்டுப்போன எந்தன்
இதயத்தை திருப்பிபெற
இல்லாவிட்டால்
உந்தன் இதயத்தை
திருடிவர

No comments: