Wednesday, August 24, 2011

குற்றம் புரியாத அரசனே

போர் குற்றம்
புரியாத மன்னவனே
உரத்த குரலில்
உரையாற்றும்
உத்தமனே

உன் குடி தவிக்கிறது
உலகமே வியக்கிறது
ஊரெங்கும் பதற்றமாய் இருக்கிறது
அசம்பாவிதங்களும் நடக்கிறது

பயிரை மேயும்
வேலிகளாய்
உன் அடிமைப்படை
அரிக்கைகளோ
வதந்தி என்கிறது

பார்த்த கண்களும்
பிடித்த கைகளும்
உதவிய உன்படையும்
பொய்யாகும் போது
எதிர்த்த மக்கள் மட்டும்
நிஜமானதே

ஓட்டு போட்ட
உத்தமிகள் இன்று
உயிர் பிழைக்க
மருத்துவமனையில்

நாடு காக்கும் அரசனே
உன் அமைதி ஆமோதிப்பது
உன்இரத்த தாகத்தையோ
இல்லையேல்
நாளை ஓட்டு கேட்க
இனவாதம் தேவையோ

நம்பிவிட்டோம் தலைவா
நீ புரியவில்லை
போர்குற்றம்

Saturday, August 20, 2011

கணவனுடன் காதலி

பத்தாண்டு கழிந்து உன்
பசுமையான நினைவுகளை
நிழலாட செயத்தகு
பணிவாக சொல்லிவிடு நன்றி
உன் காதலுக்கு
அது புனிதமானது என்பதால்

நகர்ந்து செல்லுகையில்
நலினமாய் திரும்பி பார்த்து
கண்ணால் பேசிவிட்டு சென்றாயே
பாவம் அந்த பாவை மனசு

கணவன் முன் காதலன்
கவலையுடன் சிரித்துகொண்டு
கலங்கி நின்ற அவளை எண்ணி
கண்ணீர்வடிக்கும் உன்னை
பார்த்துவிடாமல் பார்த்துகொள்
உன் மனைவி

Thursday, August 18, 2011

இருபக்கம்


வாழ்க்கை எனும் புத்தகத்தில்
வாழ்கின்ற மறுபக்கத்தை
முண்டியடித்து கடந்துவிடு
முன்சென்றதை மறந்துவிடு
முன்னேறலாம் ஒரு பக்கத்தில் -பின்
ஓய்வெடுக்கலாம் அதே பக்கத்தில்