Saturday, June 9, 2012

கனவாகவே உள்ள கனவுகள்


கருவறையிலிருந்து
கல்லறைவரையிலே
கனவாயிருந்த கனவுகள்
கனவாகவே கலைகிறது

சேனைப்படை சூழ
செவ்விதலுடையாள்
செங்கரச்சேவை செய்ய
செழிப்பாக வாழும்
அந்த கனவு
கனவாகவே கலைந்தாலும்
கவலையில்லை ஆனால்
கனவிலும் அது இல்லை

ஒட்டுவயிறு
விட்டு விரிய உணவும்
ஒட்டுத்துணி ஒதிக்கிவைக்க
உடையும் 
கொட்டுமழையில்
வீட்டிலோடும் அருவியை
ஒழித்துக்கட்ட ஓலையும்
இல்லாமை
கனவாக இருந்தாலும்
பரவாயில்லை
ஆனால் அதுவே
நிஜமாயுள்ளதே


நிஜத்தை தாண்டி
நிஜமாய் உண்டு
நிகராய் உடுத்து
நிழலிலே வாழ்ந்து
நிம்மதியாய் நிலத்தையடைய
நினைத்த கனவுகள்
கனவாய் தொடர்கிறதே  

ஏழைக்கு பிறந்த
பிள்ளையென்பதால்
பிஞ்சு முகத்திலே
புன்னகை கூட
புனிதமான கனவில்தான்
காட்ச்சியாகிறதே

கனவிலேனும்
மணவறையில்
மகளைக்கணும்
கனவுகூட கனவிலும்
கனவாகவே வருகிறதே

நிஜத்தின் ஏக்கம்
நிழலாய் கனவில் தொடரும்  
என்பார்கள்
நிஜங்கள் கூட
கனவில் எட்டா தூரத்தில்
எதிர்மறையாய் வந்து
உயிரை குடிக்கிறது

கவலைபோக்க கண்ணீரும்
கவலை மறக்க கனவும்
கைகொடுக்குமென
கல்லறைக்காய்
காத்திருக்கின்றோம்

Friday, June 1, 2012

மாரிவிடதே பெண்ணே மறுபடியும் ..... கவிதை ஒலி வடிவில்


 

 

 

லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும் வியாழன் கவிதை நேரத்தில் ஒலிபரப்பான எனது கவிதை குரல்கொடுப்பவர் ஷைபா மலீக்.... 
நன்றி!!!!!!!