Monday, April 30, 2012

இப்படியும் சில பொண்ணுகள் இருக்குது


ஓபனா போரதுவள பேசன்னு சொல்லுது
அத நாங்க பாத்து திருத்த சொன்னா 
களிசறைன்னு கத்துது
ஒழுக்கமா உள்ளதுவள 
கினதுத்தவளன்னு சொல்லுது
ஓரிரு துண்டோட உலகையே சுத்துது
பாக்கு பீச் எல்லாம் என்னென்னமோ நடக்குது
பண்பில்லன்னு  சொன்னா 
பரதேசி உனக்கென்னன்னு கேக்குது
கண்டவனெல்லாம் கட்டிபிடிச்சி தொட்டு பேசுது
கேகப்போன சோசலிசம்ன்னு எரிஞ்சி விழுகுது

சிகரெட்டு பீரெல்லாம் சகஜமா அடிக்குது
கிளப்புக்கும் போறதையும் 
நாகரிகமுன்னு சொல்லுது
ஹோட்டல் ரூமுக்கும் போய்வருகுது அனா
ஒன்னும் தெரியாதது போல விட்டுள நடிக்குது.
ஆணுக்கு நிகராக வரணுமுன்னு துடிக்குது ஆனா
அறிவு ஆட்சி அதிகாரத்தவிட 
அழிவுலதான் முன்முறமா நிக்குது
தாய்மையகூட தரையில தூக்கியடிக்குது
அத வெளியில சொன்ன தருதலன்னு திட்டுது
உலகாத்துல இப்படியும் சிலபல பொண்ணுகள் இருக்குது

Tuesday, April 24, 2012

முஸ்லிம்களின் உணர்வை கொச்சைப்படுத்தும் ஹிஸ்புல்லா


அஸ்ஸலாமு அழைக்கும்
தம்புள்ளை மஸ்ஜித் தாக்கப்பட்ட விடயம் குறித்து சகோதரர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள கருத்து ஈமானுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆத்திரமூட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை இவர் இந்த நிகழ்வு தொடர்பாக ஆரம்பம் முதலே அலட்சியமான கருத்துக்களையே விட்டு வருகின்றார் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் மனநிலையை புரியாமலும் அவர்களை இன்னும் கொச்சைப்படுத்துமுகமாகவே இவரது அறிக்கைகளும் செயல்களும் உள்ளது.

இந்த மஸ்ஜித் வேறு ஒரு இடத்துக்கு மாற்றப்படுவதை ஆதரித்தும் அது சிறந்ததே என்றும் முதலில் அறிக்கைவிட்ட இவர் இங்கு எமது உரிமை பாதிக்கப்பட்டதையும் இதனை அனுமதித்தால் நாடுபூராகவும் இது தொடரும் என்கின்ற விடயத்தையும் பேச மறந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து இந்த அநியாயத்தை நிகழ்த்திய அவோக்கியர்களிடமே சென்று “ அனே ஹமுதுரனே ஒபதுமலா பள்ளியாட கிசிம ஹானியக் நோவனவிடியே தமாய் கேசிரில திஎன்னே மாந்திய பொரு பிரச்சார காரல தியன்னே” என்று கூறுமளவுக்கு இவரது மனநிலை மாறியுள்ளது கிட்டத்தட்ட 65 வருடம் பழமையான மஸ்ஜிதில் ஜும்மா தொழுகை உட்பட 5 நேர தொழுகைகள் தொலப்படாதது இவருக்கு இழப்பாக தெரிய வில்லை போலும் அத்துடன் அந்த காடையர்களின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளும் செயல்களும் இவருக்கு புகலாரமாக தெரிந்திருக்கின்றது போலும்.

அனைத்து தலைவர்களும் ஒருமித்து எத்ர்க்கும் சமயத்தில் இவரது அறிக்கைகள் முஸ்லிம் மக்களை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.

இதேசமயம் இந்த மஸ்ஜிதை இடமாற்றுவதனால் எந்த தவறும் இல்லை இதனை மாற்றுங்கள் என்று ஜனாதிபதிக்கு எங்களில் ஒருவரே கூறியிருக்கிறார் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஆசாத் சாலி சக்தி டிவி  மின்னல் நிகழ்ச்சியில் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது

Nizam Farook  கட்டாரில் இருந்து.

Monday, April 2, 2012

கருத்துச்சண்டை


உலகத்தில கருத்து வேறுபாடுகளும் அதனை ஒட்டிய பிரச்சனைகளும்
இருந்துகொண்டேதான் இருக்கின்றது. இந்த கருத்து வேறுபாடுகள் பல சந்தர்ப்பங்களில் பெரிய பிரச்சைகளாக மாறுவதற்கு நாமே பிரதான காரணமாக இருக்கின்றோம்.

பொதுவாக அனைவருடைய கருத்துக்களிலும் அவர்களின் அனுபவங்களும் புரத்தாக்கங்களினாலும் சூழல் சூல்நிலைகள் போன்றவையும் அதிகமான தாக்கத்தை செலுத்துகின்றது. இந்நிலையில் அந்த சூழலுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழலிலுள்ள ஒருவருக்கு இவரது கருத்து முற்றிலும் பிழையானதாக தென்படுகின்றது இந்நிலையில் இவ்விருவருக்கிடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுகின்றது.

ஒருவரின் கருத்தில் மற்றவருக்கு உடன்பாடில்லை என்றாலும் கூட அவரது கருத்தை உரியமுறையில் மதிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் அந்த கருத்தை கூறியவரும் தனது கருத்தை மற்றவர்கள் அனைவரும் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற மனநிலையில் இருபாதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலை எங்களிடையே மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.

கருத்து வேறுபாடு ஏற்படும் பல சந்தர்ப்பங்களில் எனக்குள் எழுகின்ற ஒரு சிந்தனை “நான் ஏன் அப்படி யோசிச்சிருக்க கூடாது” அல்லது “அவர்கள் அப்படி யோசிதத்தில் என்ன தவறு இருக்கு” என்று அவர்களின் நியாயத்தை சற்று நடுநிலையாக இரு சாராரும் சிந்திப்பர்கலேயானால் இந்த முரண்பாட்டில் நியாயங்கள் உள்ளதை உணரமுடிகின்றது

சில சந்தர்ப்பங்களில் நம்மை விட அந்தஸ்த்தில் குறைந்த ஒருவர் நம்மை விட சிறந்த கருத்து கண்ணோட்டமுடையவராக இருக்ககூடும் இந்நிலையில் அவரது கூற்றை என்ருக்கொல்வதில் நமக்கு தால்வுச்சிக்கள் இருப்பதாக கருதுகின்றோம். இது உண்மையிலையே தவிர்க்கப்படவேண்டிய ஒரு மனநிளையாகும்.

தனது கூற்றை நியாயப்படுத்துவதட்கு நாம் முயற்சிப்பது வழமை ஆனால் அதைவிட நாம் எப்பொழுது மற்றவர்களின் கூற்று எமது கூற்றுக்கு முரணாக அமையும் போது அக்கூற்றிலும் உண்மை நியாயம் இருக்கிறதா என்று தேடத்தொடங்குகின்றோமோ அன்றிலிருந்து இவ்வாறான முரண்பாடுகளை கணிசமான அளவு குறைக்கலாம் என எதிர்ப்பர்க்கின்றேன்.
எனவே கருத்து சிக்கல்களை சிறந்தமுறையில் கையாலக்கூடியவர்களாக எங்களை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்