Sunday, March 25, 2012

நண்பனுக்கு ஒரு அறிவுரை


உருவம் காணாமல்
குரல்தணும் கேளாமல்
குறுகிப்போன உன் உள்ளத்தால்
குழம்பி போய் விட்டாய்
தத்தையாக தான் இருப்பாளோ
இல்லை உன்னை தடம்புரள வைக்கும்
வித்தைதனை தான் காட்டுராளோ
இல்லை உன்னை நையாடும்
நயனஞ்சகனாக இருப்பானோ
சூனியப்பேச்சிலே சுருங்கி விடாதே
சுற்றுச்சூழலையும் மறந்துவிடாதே
சுருங்கிப்போன உலகினிலே
விரிந்து போனது இந்த வலையமைப்பு
அதனாலே உருவாகியுள்ளது
பல பொய் கணக்கமைப்பு
அதிலே நீயோ அழிந்து விடாதே தம்பி
இருந்தும்
உண்மையான காதல் மட்டும் மலரட்டும்
அது உன் திருமணத்தின் பின் தொடரட்டும்
வாழ்க வழமுடன்
குறிப்பு :- எனது நண்பனின் ஒருவனின் முகம் காணாத காதல் கவிதைக்கு எழுதிய பதில் கவிதை

Wednesday, March 21, 2012

காதலின் வெறி

வலி பிறந்து
விழி நனைந்து
ஒலி இழந்து
ஓரமாய் சென்று
செயலிழந்து
அணுவணுவாய்
சாகும் இந்த சனியனை கூட
சுகம் என்று சொல்லுமளவுக்கு
செயலிழந்து போனதே
உந்தன் மூளை

உயிராய் இருந்த
உறவுகள் கூட
உதிர்த்துவிடும் அளவிற்கு
உலர்ந்து போனது
உன் உள்ளம்

நித்தம் சிரித்து
நிதானம் இழந்து
பித்தாய் திரியும்
பிணமாய் ஆனது
உன்னுடல்

இத்துணை மாற்றம் தந்தும்
இன்னும் நீ அந்த காதலில்
என்ன சுகம் கண்டாய்
மாறிப்போன உன்னை
மாற்றிப்பாரு புரியும்
அதன் கொலைவெறி