Thursday, December 6, 2012

அமைதி பூப்பதெங்கே..?



ஹிட்லர் விட்டுவைத்த
எச்சங்களாய்
நாட்பத்தைந்தில்
நடுத்தெருவில் இருந்த
யகூதிகளே

கல்நெஞ்சம் படைத்த
சகோதர நாடுகள் பல
இருந்ததும்
உன்னை கைவிட்டார்களா
கங்கணம் கட்டியே
அனுப்பிவைத்தார்களா
பாலஸ்தீன மண்ணுக்கு

உன் வஞ்சகம் தெரியாது
நல் நெஞ்சகம் படைத்த
புண்ணியவான்கள்
புகழிடம் தந்தார்கள்
அமைதி பூத்துக்கிடந்த காசா
புதைகுழியாய் மாருமென தெரியாது

கண்முன்னே  உடன்பிறப்புக்களும்  
பச்சிளம் குழந்தைகளும் சிதரிப்போனாலும்
குண்டு மலை பொழிந்தாலும்
சுவனத்தின் வாடைதனை
நுகர்ந்தவாரே முன்நிற்கும்
ஈமானிய உறவுகள் அவர்கள்

சொந்தமன்னுக்காய் உயிர்த்துறந்து
சாஹிதேனும் பட்டத்தோடு
சுவத்தை பரிசாய் தர
ஏகஇறைவன் தேர்ந்தெடுத்த
கண்ணியவான்கள் அவர்கள்  

சொற்ப காலம் வாழும்
அற்பமான இந்த உலகை
துச்சமாக நினைத்து
அச்சமின்றி ஆயுதமுமின்றி
அமைதி பூப்பதேங்கே
என்றகின்ற ஆதங்கத்துடன்  
போராடும் வீர நெஞ்சர்கள்

தன் மரணத்தையே
கண்முன்னே கண்டும்
தப்பிக்க வழிகள் இருந்ததும்
நயவஞ்சகனாய் மாறாது
சொந்தமன்னுக்கும்
மதத்திற்கும் துரோகம்
செய்யாத உத்தமர்கள்

சிங்கமாய் இருந்தது
சிலமணி நேரத்தில்
நிரந்தர அமைதியை முத்தமிட்டு
சுவனத்தை சென்றடையும்
வெற்றியாளர்கள்

அழிவுகளுக்கு இடையே ஆறுதலாய்
ஐநாவில் அங்கீகாரம் கிடைத்தது
படுபாவிகள் உடனே புறப்பட்டனாறாம்
புதுக்குடியிருப்பு அமைத்து மேட்குக்கரையின்  
அமைதிக்கனவையும் அழித்துவிட    

அதிகாரமுடையவன்
அநியாயன்களை அரங்கேற்றுகின்ரான் 
நியாயம் பேச அமைத்த ஐநாவோ
அநியாயத்துக்கே துணையாகின்ரான் 
இந்நிலையில் அமைதி பூப்பதெங்கே

அருமைநபி சொன்னபடி
இவையெல்லாம் நிகழ்ந்தபடி
இருக்கின்ற படியால்
வாழ்ந்திடுவோம் நல்லபடி
நிரந்தர அமைதியை சுவனத்தில் எதிர்பார்த்தபடி

Friday, November 16, 2012

மாற்றம் தேவை



இனிப்பான அந்தரங்க உறவுகள்
எப்போதும் அரைகளினுள்ளே அரங்கேறவேண்டும்
இடம்மாறும் போது அதன் தரம் மாரும்
தரங்கெட்ட செயலாய் தரணி பேசும்

இடம் பொருள் ஏவல் பார்த்து
அர்த்தம் மாரும் செயல் அது

முறைப்படி அனுமதித்து
அனுபவித்த அனுபவத்தை
அரங்குகளில் அரங்கேற்றுவதே
அநாகரிகமாக கருதும்
நாகரீகமான சமுகம் நாம்

பரகசியமாய் பேசுவதிலே
பலசெயல் அழகாகும்
இரகசியம் காப்பதிலே தான் 
சில செயல் சிறப்பாகும்

விரசம் கொண்ட
சில கற்பனைகளையும்
சில கலவுகளை 
அடைமொழி கொடுத்து
பல அழகு நடை அமைத்து
அழகுபார்ப்பதை அனுமதிப்பதன்
அர்த்தமென்ன

இல்லற வாழ்க்கையினை
வர்ணனையாய் வழங்கும்
குற்றங்கள்
சுற்றங்களாக மாறியதன்
மர்மம்தான் என்ன

காமக்கதைகளையும் 
காமக்காட்ச்சிகளையும்
கலைபுடுங்கும் சமுகம்
காமச்செயல்களை கவிகளில்
அரங்கேற்றுவததிலும் 
அங்கீகரிப்பதிலும் மாற்றம் தேவை

Tuesday, October 30, 2012

ஆயுட்கைதியா?.. தூக்குக்கைதியா?




இமைகள் லிரண்டின் சரணம்
இதயத்துடிப்பின்
அர்த்தம் மாறத்தொடங்கும் தருணம்
காதலெனும் நீதிமன்றத்தில்
தூக்குக்கைதியாய் வாதிடும் தருணம்
  
உச்சி வெயிளினிலும்
உச்சி குளிர்ந்து
உள்ளங்கால் வியர்க்கும்
மெய்மறந்து மேனி
நடுநடுங்க
ஓராயிரம் ஹோர்மோன்கள்
ஊற்றெடுக்கும் தருணம் அது

நாடியிலே பனிக்கட்டியும்
நாலத்தினிலே வெந்நீரும்
ஊடுருவும் ஒரு
வேதனை கலந்த சுகம் அது
காதலைச் சொல்லும் கனம்

பேச்சுக்கள் நளினமடைய
மூச்சுக்கள் மூர்ச்சையாக
ஆழ்கடலின் பூகம்பத்தை  
அடிநெஞ்சில் உணரும் தருணம்

கண் சிமிட்டி
தலைசொரிந்து கையசைக்கும் 
கனப்போளுதினிலே
மௌன அலைகள் தூதுபோக

அவள் ஏவும்
அம்புகள்
புன்னகையாய் வந்து
இதயத்தை சிதறடித்தால்
காதட்சிரையில்
ஆயுட்கைதியாவான்
அவை நெருப்பாய் வந்து
இதயத்தை எரித்தால்
தூக்குக்கைதியாவான்   



லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும் வியாழன் கவிதை நேரத்தில் ஒலிபரப்பான எனது கவிதை குரல்கொடுப்பவர் ஷைபா மலீக்.... 
நன்றி!!!!!!!