Friday, December 17, 2010

வெளிநாட்டு அவலம்

வாழ்வை ஒளியக்க
வானில் பறந்து வந்தோம்
தற்போது புரிகிறது ...
பிரிவின் துயரம்


இடையிடையே காதுகளுக்கு எட்டுகிறது
உறவுகளின் இறப்புகள் ......
அயலவர்களின் விபத்து ........
நண்பர்களின் திருமணம் ..........
சமுகத்தின் விழ்ச்சி .............
ஊர் திருவிழா .................
என்ன செய்ய முடிகிறது
கண்களை கசக்கியபடியே
phone ய் கையில் எடுத்தால்
என்ன கொடுமை அதிலும்
balance zero
this is our life here



பாசமிக்க பெற்றோர் .....
தோள்கொடுக்கும் உடன்பிறப்புகள் ........
தூக்கிவிட்ட நண்பர்கள்............
கொஞ்சிக்குலவுகின்ர பிஞ்சுகள் ........
ஆருதலாக இருந்த உறவுகள் ............
தட்டி விட முயற்சித்த ஊர் பெரியவர்கள் ........
இவர்களை தற்போது
கனவுகளிலே காண்கின்றோம்
நினைவுகளுடனே வாழ்கின்றோம்
காரணம் புரிகிறதா ......




வெள்ளிக்கிழமை
அது விடுமுறை அல்ல
இங்குள்ள உறவினர்கள், நண்பர்கள்
தெரிந்தவர்களுடன்
உறவாட கிடைத்த வேலை நாள்


கனவுகளை தேடி
கடல் கடந்து வந்து
வாழ்க்கையையே கனவாக்கிய
துரதிஷ்டசாலிகள் நாம்



நாட்டில் உள்ளவர்களுக்கு
நமது எல்லா கனவுகளும் நனவனதாக
எண்ணம் ...


pls call me ,
do u hv any vacancy ,
pls arrange me a visa ,..
இவை வர துடிக்கும் நெஞ்சங்களின்
sms , email
எவ்வாறு உரைப்போம்
நாம் படும் துயரை
இவர்களிடம்

இருப்பினும்
இவர்களின் email , miscal

இவைதான் உயிர்வாயு
நாம் உயிர் வாழ்வதற்கு



தாய் மண்ணுக்கு வரத்தான் துடிக்கிறோம்
முன்னாள் வந்து நிற்கிறது
நங்கள் sign வைத்த agreement
நாய் வேஷம் போட்டால்
குறைகத்தான் வேண்டுமாம்
போட்ட வேஷத்துக்காக நிற்கிறோம்
இரண்டு வருடம்


அதுவரைக்கும் தொடரும்
இந்த வெளிநாட்டு
அவலக்குரல்..............

நண்பா .................
நான் சொன்னது
சொந்தகதை அல்ல அது ...
வெளிநாடு வந்த பலரும் சொல்லும்
பொதுக்கதை
அனைவரது அவலமும்
சேர்ந்த குட்டிக்கதை

Sunday, October 17, 2010

அந்தரே ......N……. சுயநலம்




சில
நாசகார சக்திகளின்
நசச்செயளுக்கு
நம்மில் பல படித்த
“பாமரர்களும் “
பலியாகி உள்ளனர்.

ஏதேதோ சொல்லி
முறுக்கேறும் நரம்புகளையும்
கொதிக்கின்ற இரத்தத்தையும்
நெருப்பு முட்டி
குழிர் காய்கிறது
இந்த அந்தரே ......

எதோ புரட்ச்சி செய்யும் எண்ணத்துடன்
வீதியில் இறங்கி
வீனாய் போகும் இவர்களுக்கு
விளங்குவதில்லை
நாம் தான்
சுத்த சுயநலவாதி என்று .........

காசு படைத்தவன்
கடல் கடந்து படிக்க செல்கிறான்
நமது காசை
வெளிநாட்டு கடலில் கரைக்கிறான்
கவலையில்லை
இவைகளுக்கு

காசு படைத்தவனை
வெளிநாடு செல்ல விடாதே
நம்நாட்டிலும் அதுபோன்று பல்கலைகழகம்
அமைத்து கொடு
என குரல் கொடுத்தால்
அது பொதுநலம்

இல்லை இல்லை
அனைவரும் படித்தால்
அண்ணனுக்கு இல்லை மரியாதை
படிப்புக்கு இல்லை மதிப்பு
என்பதில் தான் உள்ளது
இவர்களின் சுயநலம்

சிஷ்ய மர்தனய்ட ஏறகிவா என்று
2 % உள்ள நிங்களே கொதிதேளுகிரிர்களே
அந்த பல்கலைகழகம் கிடைக்காத
98 % மாணவர்களுக்காக என்ன செய்திர்கள்
அவர்களும் AL சித்தியடைந்த
சிஷ்யர்கள் தான்
இது தான் சுயநலம்

எல்லாரும் படித்தால்
எல்லாரும் பட்டம் பெற்றால்
எங்களுக்கு JOB கஷ்டமாகும்
என்பதற்காக எமது சமூகத்திற்கே
படிப்பறிவு தேவை இல்லை என்பதில்
புரிகிறதா இங்கு சுயநலம்

Thursday, September 16, 2010

தொடரும் அடுத்த வருடமும்


ஆர்வம் .......ஆய்வுகள் .............வேட்கை ............விவாதம்...........
இவைகளுடன் பலரும்
நன்மையை கொள்ளையடிக்க
திரண்டு வந்தனர் ரமழானில்
ரமழான் சென்றுவிட்டது
ஆனால்
பிறை........
தராவிஹ்......
குனூத் ................
லைலாதுல்கதிர் ...........
பெருநாள் தொழுகை .............
இவைகளின் குழப்பம்
இன்னும் திறவில்லை
அனைவரும் மறந்து விடுவார்கள்
அடுத்த ரமலான் வரை

Sunday, July 18, 2010

இயக்க வெறி

முன்பு
ரமழான் வந்தால்
மகிழ்ச்சி .............
இப்பொழுதும் மகிழ்ச்சி
இல்லாமல் இல்லை
அதையும் விஞ்சி
நிற்கின்றது 
பயம்
இயக்க வெறி பிடித்த
காடையர்களின்
வெறித்தனம்
அரங்கேறுவதால் ..............