Tuesday, January 17, 2023

நாடு இருக்குது, இன்னமும் இருக்குது

 கவி பாடி பல்லாண்டு ஆயிருச்சு 

கால ஓட்டத்தில் அனைத்தும் மறந்து தூரம் ஆயிருச்சு

நாடு திரும்பி ஐந்தாறு ஆண்டாயிருச்சு 

நல்லாட்சி என்று ஒரு ஆட்சி தான் 

அந்தக் காலத்தில் இருந்துச்சு


ஈஸ்டர் தாக்குதல் நடத்தி  மூவாண்டாயிருச்சி

கொரோனா வந்ததும் 

நம்ம சார் ஆட்சிக்கு வந்ததும் ஒன்றாயிருச்சு


வக்சினேசன் கொடுத்து கொரோனாவை அடக்கி ஆச்சு 

அரகலய மூலம் நம்ம சேரையும் தூக்கி ஆச்சு

ஆட்சியை துறந்து ஆறு மாதம் ஆயிடுச்சு

ஆக மொத்தத்துல எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு


நல்லா செய்தவங்க இவங்க தான் என்று பேச்சிருக்க

நாட்டுல கிடைத்தது எல்லாமே கிடைக்காமல் இருக்க

கால நேரமெல்லாம் கிவுல போயிட்டு இருக்க

அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழியில்லாமல்

மக்கள் திண்டாடிட்டு இருக்க


நாட்டைக் காக்க யாரும் முன் வராது இருக்க

போனஸ்ல வந்தவர் தான் சார் 

பொம்மை போல வந்துட்டாரு ஜனாதிபதியாகி

சாவுக்கு முன்னாடி கனவை நினைவாக்கின சால்வைக்கு நன்றி கூறி


மூன்று வேளை சாப்பாடு கொடுக்க

வந்திருக்கிறார் நம்ம சாரு

இப்ப ரொம்ப உஷாரா தான் இருக்காரு

எதிர்த்துப் பேசினா அரஞ்சு உள்ள போடுகிறாரு.


இப்படி நிலவரம் இருக்கையில 

நாட்டை விட்டு திரும்ப போறதா முடிவு ஆயிருச்சு

நாட்டை விட்டு வந்தும் இப்ப மூன்று மாதம் ஆயிருச்சு

நாடு இருக்குது

இன்னமும் இருக்குது

அழகான அனைத்து வளங்களும் பொருந்திய நாடென்று புத்தகங்களில்  எழுதியிருக்குது.


நிசாம் பாரூக்

Nizam Farook