Thursday, October 1, 2015

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 

பருவம் அறியா பிஞ்சுகளே 
பால்வாசம் மாறாத பருவமதினிலே
பாரைவிட்டு பிரியும் சோகம் அது  
மனித மிருகம் செய்யும் அவலம் 

மன்னிக்கவேண்டுகின்றேன் 
மானிடம் செய்யும் பிழையால் இங்கு 
மிருகங்களை கொச்சைப்படுத்தியதற்கு

சீமா வித்யா சயோமி என 
தொடரும் இந்த அவலம் - ஆனாலும் 
சீரழித்த அந்த அசிங்கங்களுக்கு இன்னும் 
எமது சொந்தப்பணத்தினிலே  
சோருற்றுகின்றோம்
சிறையினிலே நிம்மதியாய் வாழ 
வழிவகுத்து கொடுத்திருக்கின்றோம்

கைது தொடக்கம் நீதி கிடைக்கும் வரை 
நியாயமே இன்றி 
பாதிக்கப்பட்டவன் பணத்தில் 
விசாரணை நடத்துகின்றோம் 

பொறிமுறை மாற வேண்டும் 
அறநெறி ஓங்க வேண்டும் 
மனித உயிர் பெருமை விளங்க வேண்டும் 
மலர்களின் அருமை புரிய வேண்டும் 
இதற்கெல்லாம்
மனது ஒருநிலைப்பட வேண்டும் 

மனது ஒருநிலைப்பட மாசற்ற சூழல் வேண்டும் 
மகத்துவமாய் வளர்க்கப்பட வேண்டும் 
நன்மை தீமை உணர்த்தப்பட வேண்டும் 
வஞ்சகம் போட்டி பொறமை ஒழிக்கப்பட வேண்டும் 
பிறரை மதித்து வாழ பழக்கப்பட வேண்டும் 
பிறரிடம் விழிப்பாய் வாழவும் பழக்கப்பட வேண்டும் 
பெற்றோர் மட்டுமே 
தமக்காக வாழ கடமைப்பட்டவர்கள் என உணர்த்தப்பட வேண்டும் 

பிஞ்சுகளை நாமும் அன்போடு அனைத்து அரவணைக்க வேண்டும் 
அன்புக்கும் செல்லத்துக்கும் வித்தியாசம் நமக்கு புரிய வேண்டும்.
செல்லத்தை அளந்தே கொடுக்க வேண்டும்  
சண்டை சச்சரவுகளை அவர்கள் முன் அடக்கிட வேண்டும் 
மற்றவர் குறைகளை மறைத்திட வேண்டும்
சமுகம் போற்றும் பிள்ளைகளாய் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும் 

இதற்கான சக்தியையும் 
சிறார்களுக்கான பாதுகாப்பையும் 
எல்லாம்வல்ல இறைவன் வழங்கிட வேண்டும் 

வாழ்த்துக்கள்