Tuesday, October 15, 2013

கதரவைக்கும் ஒரு கண்ணியமான பெருநாள்



தித்திக்கும் தியாகத்திருநாள்
நம்மை கதரவைக்கும்
ஒரு கண்ணியமான பெருநாள்

சோகம் நிறைந்த மனதோடு
சுபஹ் அதானிலே விழித்தேலுகின்றோம்
மயான அமைதியிலே
பெருநாள் தொழுகைக்கு புறப்படுகின்றோம்
மங்களகரமான பழைய நினைவுகளை
மனதிலே சுமந்தவாறு

தித்திக்கும் நாள் நாளை என்றால்
துள்ளிக்குதித்து பம்பரமாய் ஓடித்திரிந்து
புத்தாடை உட்பட
பலகாரம் முருக்கு தொதல் என அப்பப்பா
அழகான ஆயத்தங்கள்
தாய் நாட்டில் இருக்கும் வரை

இங்கு திருநாள் என்றாலே
அது ஒரு தொடர் விடுமுறை
என்பதில் மட்டுமே மகிழ்ச்சி

பெருநாள் தொழுகை ஒன்றே இங்கு
பெருநாள் என்பதை நினைவூட்டும்
எஞ்சிய நேரங்களோ தாய்மண்ணின்
நிகழ்ச்சி நிரல்களை மனதிலே  
நிழலாட செய்யும்

பெருநாள் தொழுகை முடிந்து
களைகட்டும் வீட்டுத்தெருக்களும்
சிறுசுகளின் பெருநாள் பணச்சண்டைகளும்
உறவுகளின் சந்திப்புக்களும்
நம்மை விட்டு பிரிந்த உறவுகளின்
கபுரடி தரிசனங்களும்
மனக்கன்முன்னே வந்து
விழிகளை குளமக்கிச்செல்லும்

வீட்டிலே உறவுகள் புடைசூழ
பிஞ்சுகள் மடியிலே புரண்டுவர
உண்ணும் பெருநாள் உணவை நினைக்கையிலே
இங்கு கடை புரியாணி மஞ்சளாய் தெரிகிறது
ஆனால் சுவைக்க மறுக்கிறது

இருந்தும் இறைவன் நாட்டப்படி
அடுத்த பெருநாளிலாவது
உறவுகளோடு ஒன்றுகூடி
உரிமையோடு கொண்டாடும்
உறுதியோடு கழிகிறது இப்பெருநாள்
மீண்டும் ஒருபெருநாள் நெருங்கும் வரை

நிசாம் பாரூக்