Tuesday, November 26, 2013

மார்க்க பிரச்சாரங்கள் இன்று தனிநபர் அல்லது ஒருகுழு எதிர்ப்பு பிரச்சாரமாக மாறிவருவது....



அஸ்ஸலாமு அலைக்கும்
 
மிகவும் மனவருத்தத்துடன் இந்த பதிவை தருகின்றேன். இன்றைய தமிழ் தவ்வாஹ் களத்திலே காணப்படுகின்ற மிக கேவலமான அணுகுமுறைகளை பார்க்கின்ற போது இவர்கள் எல்லாம் இஸ்லாம் பேசுவதற்கு தகுதியானவர்களா என்று நினைக்க தோன்றுகின்றது.

மார்க்க பிரச்சாரங்கள் இன்று தனிநபர் அல்லது ஒருகுழு எதிர்ப்பு பிரச்சாரமாக மாறிவருவது மிக கவலைக்குரிய விடயமாகும். இஸ்லாம் சொல்கின்ற அழகிய பிரச்சாரமுறையோ தனிநபர் அல்லது ஒரு குழுவின் தவறுகளை பொதுமேடைகளில் பேசும் போது அணுக வேண்டிய (இஸ்லாம் கூறிய) முறைகளோ கையாளப்படுவதில்லை.

தன்னை மட்டுமே ஏகத்துவவாதிகள் மற்றும் சுவர்க்கத்தின் ஏகபோக சொந்தக்காரர்கள் என்று பறை சாற்றும் சகோதரர்களின் அணுகுமுறைகள் மிக மோசமாகவும் அவர்களது அண்மைக்கால அனேகமான பிரச்சார வீடியோக்களில் தவறாமல் ஒருவரையோ அல்லது பலரையோ சாடுவதையே கொள்கையாக கொண்டுள்ளது மிக தெளிவாக விளங்குகின்றது

அத்துடன் இவர்களினதும் இவர்களது சக ஆதரவாளர்களினதும் பொதுவான ஒரு வேண்டுகோளாக இருப்பது பொது விவாதத்திற்கு அழைப்பதும் வராத விடத்து அவர்களை பொய்யர்கள் என்று மக்களுக்கு எடுத்துக்காட்டி பாமர மக்களை சிந்திக்காமல் தடுக்கின்றனர்

பொதுவாக இவர்கள் கூப்பிடுவது போன்று விவாதத்திற்கு வரவேண்டும் என்கின்ற கட்டாயமோ நிர்ப்பந்தமோ எவருக்கும் இல்லை என்பதுடன் விவாதத்திற்கு வராதவர்களை வழிகேடர்கள் என்று சொல்லும் அதிகாரம் இவர்களுக்கும் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்

விவாதங்கள் அழகிய முறையில் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது விவாதம் விதண்டாவாதமாகும் போது சலாம் கூறி பிரிந்துவிடுமாரும் இஸ்லாம் கூறுகின்றது. இன்றைய நிலையில் விவாதங்களில் அழகிய முறைகள் கையாளப்படுவதில்லை என்பதனால் ஒருவர் விவாதத்திற்கு வரவில்லை என்பதற்காக அவரதுகருத்து பொய் என்று மக்களை நம்ப வைப்பது பெரிய குற்றம் என்பதையும் பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்

விவாதங்களில் ஒருவர் வாதத்திறமையால் கூட தனது கருத்தை உண்மையென்று நிறுவ முடிகின்றது (பொதுவாக நீதிமன்றகளில் வழக்கறிஞ்ஞர்கள் செய்வது போல) ஒருதரப்பு வைக்கின்ற வாதத்திற்கு சரியான பதில் அந்த சமயம் மற்றைய தரப்புக்கு தெரியாமல் இருக்கலாம் அவர்களின் ஆற்றல்களுக்கு அமையவே விவாதங்களின் பொது கருத்துக்கள் வேரூன்ரப்படுகின்றது

இவ்வாறான பல விடயங்கள் விவாதத்தில் இருக்கின்றது என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன் உண்மையை உண்மையாக்குவதற்கு விவாதமே ஒரே வழி  என்று கருதுவதும் அந்த கருத்தை விதைப்பதும் முற்றிலும் தவறாகும்

ஒருகாலத்தில் ஷஹிகான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்றும் அதை முரண்படாதவிதத்தில் விளங்க வேண்டும் என்று கூறியவர்கள் இன்று இல்லை அப்படி முரண்படுவது போன்று விளங்கும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தனது கொள்கையை மாற்றிக்கொன்டதுடன் பின் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் சஹீஹ் என்கின்ற தரத்தில் இல்லை என்றும் வாதிடுகின்ற நிலையில் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாத அல்லது இவர்களின் விளக்கத்தில் தெளிவுகிடைக்காத ஒருசாரார் இதனை எதிர்த்து பிரச்சாரம் செய்கின்ற இந்த சூழலில் இருசாரார்களுக்கும் இடையில் பாரிய கருத்துச்சன்டைகள் வீடியோக்கள் மூலமாக பரிமாற்றப்படுகின்றன என்பது யாவரும் அறிந்ததே

எனவே உண்மையை உள்ளபடி விளங்குவதற்கு இறைவன் எங்களுக்கு அருள்புரிவானாக


அனுராதபுரம் நிசாம்  பாரூக் சவுதி அரேபியாவில் இருந்து

Tuesday, October 15, 2013

கதரவைக்கும் ஒரு கண்ணியமான பெருநாள்



தித்திக்கும் தியாகத்திருநாள்
நம்மை கதரவைக்கும்
ஒரு கண்ணியமான பெருநாள்

சோகம் நிறைந்த மனதோடு
சுபஹ் அதானிலே விழித்தேலுகின்றோம்
மயான அமைதியிலே
பெருநாள் தொழுகைக்கு புறப்படுகின்றோம்
மங்களகரமான பழைய நினைவுகளை
மனதிலே சுமந்தவாறு

தித்திக்கும் நாள் நாளை என்றால்
துள்ளிக்குதித்து பம்பரமாய் ஓடித்திரிந்து
புத்தாடை உட்பட
பலகாரம் முருக்கு தொதல் என அப்பப்பா
அழகான ஆயத்தங்கள்
தாய் நாட்டில் இருக்கும் வரை

இங்கு திருநாள் என்றாலே
அது ஒரு தொடர் விடுமுறை
என்பதில் மட்டுமே மகிழ்ச்சி

பெருநாள் தொழுகை ஒன்றே இங்கு
பெருநாள் என்பதை நினைவூட்டும்
எஞ்சிய நேரங்களோ தாய்மண்ணின்
நிகழ்ச்சி நிரல்களை மனதிலே  
நிழலாட செய்யும்

பெருநாள் தொழுகை முடிந்து
களைகட்டும் வீட்டுத்தெருக்களும்
சிறுசுகளின் பெருநாள் பணச்சண்டைகளும்
உறவுகளின் சந்திப்புக்களும்
நம்மை விட்டு பிரிந்த உறவுகளின்
கபுரடி தரிசனங்களும்
மனக்கன்முன்னே வந்து
விழிகளை குளமக்கிச்செல்லும்

வீட்டிலே உறவுகள் புடைசூழ
பிஞ்சுகள் மடியிலே புரண்டுவர
உண்ணும் பெருநாள் உணவை நினைக்கையிலே
இங்கு கடை புரியாணி மஞ்சளாய் தெரிகிறது
ஆனால் சுவைக்க மறுக்கிறது

இருந்தும் இறைவன் நாட்டப்படி
அடுத்த பெருநாளிலாவது
உறவுகளோடு ஒன்றுகூடி
உரிமையோடு கொண்டாடும்
உறுதியோடு கழிகிறது இப்பெருநாள்
மீண்டும் ஒருபெருநாள் நெருங்கும் வரை

நிசாம் பாரூக்

Monday, August 19, 2013

ஷவ்வால் தலைபிறை முடிவை விமர்சிப்பவர்கள் பற்றியதே 


முதலில் உலமாசபை ஷவ்வால் தலைபிறை விசயத்தில் பல தவறுகளையும் பொருத்தமற்ற அறிக்கைகளையும் வெளிப்படுத்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அதேசமயம் இவ்வாறான தவறுகள் ஏற்கனவே பலவிடுத்தம் நிகழ்ந்துள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை எனவே எனது பதிவு இதுபற்றியது அல்ல

மாறாக இந்த முடிவை விமர்சிப்பவர்கள் பற்றியதே

உலமாசபை மக்களை பிழையாக வழிநடத்திவிட்டது என்று சூளுரைக்கும் பலர் தமது விமர்சனங்களும் வார்த்தைபிரயோகங்களும் இஸ்லாமிய மார்க்க வரையறைக்கு உட்பட்டிருக்கின்றதா என்று கவனிக்க மறந்துவிட்டனர் அத்துடன் பொய்யான கருத்துக்களை மக்களிடையே விதைத்து மக்களை திசைதிருப்ப பார்ப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்

உதாரனத்திட்கு ஒரு கருத்தை இங்கு பதிய வைக்கின்றேன்

பரவலாக பலரும் விமர்சிக்கும் ஒரு கருத்துதான் உலமாசபை தலைவரின் உரையில் பிறை 15 நிமிடம் தெரியும் என்றும் பின் தெரியாது என்றும் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தார் என்று பலர் மிம்பர்களிலும் பேசியதை பார்க்ககூடியதாக இருந்தது

உலமாசபை தலைவரின் உரையில் அவர் தெளிவாக கூறுகின்றார் வானிலை அறிக்கையின் படி பிறை வானில் 15 நிமிடமே தெரியும் அனால் வெற்றுக்கண்ணால் பார்க்கவேண்டுமானால் அது 20 நிமிடம் இருக்கவேண்டும் என்று கூறினார் (இந்த கருத்து சரியா பிழையா என்பதில் எனக்கு உடன்பாடில்லை ) அனால் இந்த கருத்தை திரிபடைய செய்து அவர் 15 நிமிடம் தெரியும் என்கின்றார் பின்னர் தெரியவே வாய்ப்பில்லை என்று கூறுகின்றார் என்று மிம்பர்களிலும் பேசப்பட்டது என்றால் இதிலிருந்து இடண்டுவிடயங்கள் தெளிவாகின்றது

1) இந்த உரையைகூட சரியாக விளங்க முடியாதவர்கள் எப்படி மக்களுக்கு தெளிவை வழங்க முடியும்
2) அல்லது தங்களது விமர்சனத்தை பலப்படுத்த கருத்தை திரிபடைய செய்து மக்களை ஏமாற்ற பார்க்கின்றார்கள் என்பது வெளிச்சம்

தங்களை குர்ஆன்  ஹதீஸின் சொந்தகாரர்கள் என்றும் பறைசார்டுபவர்களே இவ்வாறான விமர்சனங்களை அதிகம் நிகழ்த்துவதை காணமுடிந்தது

எனவே இவ்வாறான கழ்ப்புணர்ச்சி கொண்ட பொய்யான கருத்துக்களை விதைத்து விமர்சிப்பவர்களை அடையாளம் கண்டுகொல்லுவோமாக

நன்றி

நிசாம்  பாரூக் சவுதி அரேபியாவிலிருந்து

Wednesday, March 20, 2013

அன்புத்தாயே

தாயே உனக்காக ஒருகவிபாட
ஓராயிரம் முறை முயற்சித்தேன்
ஒன்றல்ல இரண்டல்ல பலநூறு வரிகள்
கோர்த்திருப்பேன்
சத்தியமாய் சொல்லுகின்றேன்
ஒவ்வொருமுறையும் தோற்றுப்போகின்றேன்

உனதன்பிற்கும் உன்னரவணைப்பிற்கும்
மட்டுமன்றி
ஊரறிய உலகறிய
என்னை வளர்த்தெடுக்க
நீ பட்ட பாடெல்லாம்
எடுத்துரைக்க
எத்தனை கவி நான் பாட??

நன்றிகூறி கவியெழுத
நான் நினைக்கவில்லை
அன்புத்தாயே - உன்
அருமை பெருமை எடுத்துரைக்க
ஒருகவிதை போதவில்லை
ஆதலால்
அந்த வீண் முயற்ச்சியை
கை விட்டுவிட்டேன்

விபரம் தெரிந்த நாள்முதல்
பல விபரீதங்கள் நினைவிருக்கு
எமக்காய் நீ பட்ட துயருக்கு
இன்னும் உணர்விருக்கு
என்மனதிலே அவையெல்லாம்
ஆழமாய் பதிந்திருக்கு

ஓட்டு விட்டில் வசித்தாலும்
ஒட்டுத்துணி உடுத்த காலம்தனை
நினைவவூட்டி
நிதானமடையச்செய்யும்
உந்தன் வழிகாட்டல்
இன்றுவரை எம்மை
வழி நடத்திக்கொண்டிருக்கு

எழுதப்படிக்க தெரியாத என்தாயே
பிஎச்டி முடித்த ஆசான்களையும்
வென்றுவிட்டாய் - நீ
அவர்களும் தராத மனிதத்தை
நீ என்மனதிலே விதைத்துவிட்டாய்

அன்னையே உன்னையே
எண்ணியே பல தடவை
வியந்திருக்கிறேன்
உந்தன் காலடியிலே
சுவர்க்கம் நிச்சயம் என்பதை
மனதார உணர்ந்திருக்கிறேன்

தரமானவர்களாய் எம்மை
வளர்த்தெடுக்க தாயே நீ
தாங்கும் வேடங்கள் பல
ஆனால் அதில் என்றுமே
நீ நடித்ததுமில்லை - மாறாக
வேடங்களிலும் உயிரோட்டமாய்
வாழும் ஒரு ஜீவன்
இத்தரணியிலேயே நீயே

அருகிலிருக்க ஆசைப்பட்டேன்
ஆனால் விதியின் விளையாட்டில்
தொலைந்து வந்துவிட்டேன்

உலகத்தின் உயிரான
உறவுகள் இரண்டில்
ஒன்றை இழந்துவிட்டேன்
உன்னையும் விட்டு
தொலைதூரமாகிவிட்டேன்


என்னருமை தாயே
என்றென்றும் நான் வேண்டுவது
என்மடியில் உன் தலைசாய்த்து
பணிவிடைசெய்ய
வல்லவன் வழிவகுக்க வேண்டும் அதன்
அருளினாலே எனக்கும்
சுவர்க்கம் சொந்தமாகவேண்டும்



Saturday, February 16, 2013

இணையத்து நட்பு



இணையில்லா இணையத்தினால்
இதயங்கள் பிணைகின்றன
இயற்கைக்கு மாற்றமாய்
பல உறவுகள் உருவாகின்றன

நம்பிக்கையில்லா வலையமைப்பில்
பொக்கிஷமான பல நட்புகள்
நம்பிக்கையோடு
இரத்த உறவுகள் போலாகின்றன
இரத்தத்தினாலும் உறவாகின்றன

ஆயிரம் நட்புகள்
அறிமுகமானாலும் இடைநடுவே
ஓரிரண்டு அடிமனதை தாக்கி
இனம்புரியா உறவொன்ரை
உயிர் பெறச் செய்கின்றது

இயற்கையின் விதியால்
இணைந்த உறவுகளாகிறது
இடையிடையே தொலைந்து
விழி நனையும் நினைவுகளாகிறது

அலைவரிசையினாலும்
தொழிநுட்ப வளர்ச்சியினாளும்
இதயங்கள் இடமாறுகின்றன
இருதுருவத்தில் இருந்தாலும்
இணைந்திருப்பது போல
உணரச்செய்கின்றது

இணையத்து காதல்
இல்லறத்திலே இணைத்தும் முண்டு
இருவரிடையே இரகசியமாய்
தொடர்வதுமுண்டு

காலத்தின் சுழற்சியில்
கண்கள் திறக்க ஏனோ
காலம் ஆகின்றது
அதனிடையே சில நிகழ்வுகள்
வாழ்க்கையை கண்ணீராக்குகிறது

இணையத்து நட்பில்
விளைவுகள் பலவுண்டு
விழிப்புணர்வா ய் இருந்தால்
வெற்றியுமுண்டு
வென்றெடுக்க உள்ளங்களுமுண்டு