Monday, December 19, 2011

வெளிநாட்டில் பணம் பெரும் முறைகள்


கட்டாரில் வேலைசெய்கின்ர நான் ஒருநாள் வேலைநிமித்தம் ஒரு
பிரதேசத்திற்கு சென்றேன் அங்கு எனது மேற்பார்வையை முடித்துவிட்டு ஒரு கூட்டத்திற்கு செல்லவேண்டி இருந்தது. அதற்காக திரும்பும் போது எனது ஓட்டுனர் “சார் அந்த களஞ்சியத்தில் ஒரு இலங்கையர் இருக்கின்றார் உங்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்” என கூறினார். உடனே திரும்பிப்பார்த்தேன் அது ஒரு தளபாட களஞ்சியம். கூட்டத்திற்கு செல்வதற்கும் போதுமானளவு நேரம் இருந்ததால் அவ்விடத்திகு செல்லுமாறு ஓட்டுனரை வேண்டினேன்.
கிட்டத்தட்ட 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருந்தார். அவருடன் சுகம்விசாரித்து விட்டு தளபாடங்களின் விலைகள் பற்றி விசாரித்தேன். ஒரு படுக்கையறை தளபாடத்தொகுதி என்னை அதிகம் கவர்ந்தது அதன் விலையை கேட்டபொழுது வியப்படைந்தேன். மீண்டும் விபரமாக கேட்டேன் வெறும் QR 2300 (LR 69,000) எனக்கூரியவன் இதனை நீங்கள் கடையில் வாங்கினால் QR 8200 (LR 246,000) எனக்கூறினான். நடப்பதை ஊகித்துக்கொண்ட நான் இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இன்னும் கொஞ்சம் குறைத்து தாருங்கள் நான் 2 set வாங்குகின்றேன் எனக்கூரியபோது அவன் QR 2000 (LR 60,000) இற்கு தருவதாக கூறினான் பின், இதற்கு ரசீது(Bill) தரமுடியுமா என கேட்டேன். முடியாது என மறுத்துவிட்டார். தற்போது புரிந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
இவ்வாறான பல விடயங்கள் இந்த மத்தியகிழக்கில் நடைபெறுகின்றது. இங்கு வேலை செய்பவர்கள் மாதமுடிவில் தவறாது பணத்தை அனுப்பிவைக்கின்றனர் ஆனால் மனைவியோ அல்லது பெற்றோர்களோ இவர்களுடைய சம்பளம் எவ்வளவு எவ்வாறு இவ்வளவு பணம் அனுப்புகிறார்கள் என்று கேட்பதுவுமில்லை அவ்வாறு ஒருசிலர் வினவினாலும் அதற்கு மேலதிகநேரம் அல்லது பகுதிநேர வேலை செய்ததாகவோ என கூறிவிடுகின்றனர்.
மற்றுமொரு நாள் எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்புநிலயத்துக்கு சென்ற போது மறுபக்கம் எனது நிறுவனத்தை சேர்ந்த ஒரு வாகனம் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருன்தது அந்த ஓட்டுனர் எனது வாகனத்தை கவனிக்க வில்லை நான் கார் கண்ணாடியை சரிசெய்து அவன் QR 10 இற்கு எரிபொருள் நிரப்பியத்தை உருதிசெய்துகொண்டு நானும் எரிபொருள் நிரப்பிவிட்டு காரியாலயம் சென்றுவிட்டேன். மறுநாள் அந்த ரசீது(Bill) அதற்கு பொறுப்பான ஒரு FORMAN ஊடாக எனது முகான்மையாலரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது நான் அந்த குறித்த வாகனத்தின் ரசீதை பார்த்தபோது வியப்படைந்து ஓட்டுனருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன் அப்போது அவன் QR 15 இற்கு நிரப்பியதாக கூறினான் (QR 5 ஓட்டுனரின் கைக்கு போயுள்ளது) ஆனால் QR 45 என ரசீதில் காணப்பட்டது (QR 30 FORMAN கையிட்கு போயுள்ளது)
எரிபொருள் நிரப்புவதற்கு எல்லா நிறுவனங்களும் பல வழிகளை கையாளுகின்றனர் ஆனால் இந்த எல்லா முறைகளிலும் பணமோசடி நடைபெறுகின்றது 5% இற்கும் குறைவானவர்களே இவ்வாறான மோசடிகளை செய்யாது இருக்கின்றனர் என்று கூறமுடியும்.
பொதுவாக இங்கு வேலைசெய்யும் அதிகமானவர்கள் தான் பெறுகின்ற சம்பளத்தை முழுவதுமாக நாட்டிற்கு அனுப்பிவிட்டு தனது செலவிற்கு வேறு எந்தவிதத்திலாவது பணம் தேடும் பலக்கமுடயவர்கலாகவே இருக்கின்றனர் இதன் போது இவ்வாறான கலவுகளிலும் ஏமாற்றுவேளைகளிலும் ஈடுபடுகின்றதுடன் அவற்றை ஒரு தவறாகா கருதுவதில்லை.
அன்று ஒரு வியாழக்கிழமை மாலை நேரம் நான் ஒரு நண்பனை சந்திப்பதற்காக சென்றிருந்தேன். அங்கு அவன் இருக்கவில்லை தொலைபேசியில் அழைத்த போது அறையிலே இருக்குமாறும் 10 நிமிடத்தில் வருவதாகவும் கூறினான். பின்பு அறையிலிருந்த மற்றைய நண்பர்களிடம் வினவியபோது அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கூறி சிரித்தார்கள். சற்று புரிந்தும் புரியாதவனுமாக இருந்த எனக்கு அனைத்துமே ஒருகணத்தில் தெளிவாகிவிட்டது. நண்பனும் அவனது நண்பன் ஒருவனும் ஒரு பொதியினை மிகவும் கஷ்டப்பட்டு தூக்கி வன்தனர் அதனுள்ளே செப்பு (CUPPER) கிட்டத்தட்ட 50kg காணப்பட்டது
அதாவது ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்கு மின்சாரத்தை நிலத்துக்கடியால் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் CABLE திருடி அதிலுள்ள கம்பிகளை எடுத்து சென்புக்கு விற்கின்றனர் ஒரு KG QR 15 தொடக்கம் QR 20 வரை விற்பதாகவும் தெரிந்துகொண்டேன்
இவை எனது அனுபவத்தில் நான் கண்கூடாக கண்டவற்றில் சிலதையே இங்கு குறிப்பிட்டுள்ளேன். நான் கண்டதும் கேட்டதுமான தகவல்களை வைத்து பார்க்கின்ற பொழுது வெளிநாடுகளில் வேலை செய்கின்றவர்களில் 90% ஆனவர்கள் எதோ ஒருவகையில் முறைகேடான விதத்தில் பணமோ பொருளோ ஈட்டுகின்றனர்.
அநேகமானவர்கள் நாடு திரும்பும் போது பெட்டி அனுப்புவார்கள் இப்பெட்டிகளில் வருகின்ற பொருட்களில் அதிகமானவை இவ்வாறு ஈட்டியவைகளாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது.
எனவே விட்டிலுள்ளவர்கள் தனது கணவனோ, சகோதரனோ அல்லது மகனோ வெளிநாட்டில் இருந்து அனுப்புகின்ற பணமானாலும் பொருளானாலும் இதனை எவ்வாறு ஈட்டி இருக்க கூடும் என்றும் அவனது சம்பளத்துடன் ஒப்பிட்டு அது சாத்தியமா என்பதை அவதாநிப்பதுடன் அவர்களது வாருமானத்திட்கு ஏற்ப தேவைகளை கூறுபவர்களாக இருக்க வேண்டும் தேவைகள் அதிகமாகின்ற போது அல்லது அத்தேவைகளை மிக குறுகிய காலத்தில் அடைவதற்கு எத்தனிக்கின்ற சந்தர்ப்பங்களிலே இவ்வாறான தவறுகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும் பதிவு செய்ய விரும்புகின்றேன்
இவ்வாறான முறைகளை தவித்து நேர்மையான வழிகளில் முன்னேற முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் உழைத்து உயிர்வாழ்வது என்றும் மனநிம்மதியையும் சிறந்த எதிர்காலத்தையும் தரும் என நினைக்கின்றேன்
-Nizam Farook-