Thursday, June 23, 2011

பள்ளிப்பருவம் நினைவிருக்கா..

கலையில் எழுந்து பள்ளி சென்று
பாடம் படித்து
நண்பர்களுடன் ஓடி விளையாடி
சக மாணவிகளுடன் சண்டை பிடித்து
ஆசிரியரிடம் அடி வாங்கி
இடைவேளை நேரத்தில்
முண்டியடித்து கான்டீன் சென்று
இடியப்பபும் சம்பலும் இல்லா விட்டால்
தேங்காய் ரொட்டியும் வடையும்
உண்டு மகிழ்த்த
ஒன்பதாம் வகுப்பு நினைவிருக்கா



புரியா வயதில் புறிந்த காதல்
புரியும் பொது பிரிந்த காதல்
புன்னகையுடன் மலர்ந்த காதல்
இடை இடையே காதுகளுக்கு எட்டும்
ஆசிரியர் - மாணவர்களின் காதல் இவ்வாறு
சூடுபிடித்த காதல் கதைகள் நினைவிருக்கா



பரிட்சைகள் நெருங்க
ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து
விரிவாக படித்து விளக்கம் பெற்று
பரிட்ச்சை முடிந்து வெளியே வந்து
வினாக்களை அலசி விக்கி நின்ர
வினாடிகள் நினைவிருக்கா



சண்டை பிடித்த மாணவிகள்
புரிந்துணர்வுடன் சகோதரிகளாய்
பேசி பழகி உதவிகள் புரிந்து
விடுமுறைகளுக்கு விடு சென்று
விருந்துகள் பரிமாறிய அந்த
O/L பருவம் நினைவிருக்கா


ஓய்வு நேரத்தில் வகுப்பரையில்
ஓயாது இசைக்க
அதிபர் கண்டு office க்கு அழைக்க
சம்பந்தமே இல்லாத
சக தோழிகளும் உடன் வந்து
இருவருக்காக இருபது பேர்
Union சேர்ந்தது நினைவிருக்கா


முதலாம் பாடவேளை முடிந்ததும்
கூட்டு சேர்ந்து கான்டீன் சென்று
பாராட்டவும் பருப்பும் சம்பலுடன் உன்ருவிட்டு
அருகிலிருந்த பெண்களுக்கு ஒதுக்கிய
நீர்குழாய்யில் நீர் அருந்துகையில்
அதிபர் அழைத்து அன்பாய் சொல்லியதும்
அடங்கவிடத்து asembily இல் தூற்றியர்த்து
துல்லியமாக நினைவிருக்கா


இறுதியாய்
உயர்தர பரிட்ச்சை முடிந்த
பதற்றத்துடன்
பாடசாலையில் ஒன்றுகூடி
பலமணி நேரம் பேசிவிட்டு
பிரிவை உணர்ந்து
பிரிய முடியாமல் கண்ணிருடன்
பிணமாய் பிரிந்தது நினைவிருக்கா