Friday, May 27, 2011

விடுமுறை

அஆஹா
இலங்கை மண்ணை நெருங்க
மகிழ்ச்சி குளிர்ச்சி மனதிலே எழுச்சி
மரத்து கிடந்த மனது
நேகிலாத்தொடங்கியது

பாலைவன வேய்லுக்கு
பாலாய் போன கண்கள்
பச்சை பயிரை கண்டு
பயந்து போனது
தூசு கற்றை விட்டு
தூய கற்றை கண்டு
பெருமுச்சு விட்டது மூக்கு

மொத்தத்தில் விடுதலையடைந்த
உணர்வோடு வீடு சென்றேன்

எதிர்பாராமல் கண்டதால்
அதிர்ந்து போனார்கள் பலர் அங்கு
சொல்லாமல் சென்றதால்
கோபித்து விட்டனர் சிலர் இங்கு

கலகலப்பாய் விளையாடி
கொஞ்சி குலாவி
சுற்றி திரிந்து
சுற்றுலா சென்று
விருந்துகளும் பெற்று
நண்பர்கள் ஒன்றுகூடி
அரட்டை அடித்து
நன்மைகள் சில செய்து
நலவு பொல்லாப்பில் கலந்து கொண்டு
குதுகளிப்புடன் இருக்கையில்
முடிந்து விட்டது விடுமுறை