Sunday, April 3, 2011

பயமில்லை இப்போது

தெரியாத இடம்
புரியாத மொழி
நெஞ்சி நிறைய பயத்துடன்
புறப்பட்டு சென்றார்கள் வெளிநாட்டுக்கு
2 வருடம் இருந்தால் போதுமென்று

ஆயரம் தான் இழந்திருப்பார்கள்
ஆயரக்கனக்கில் உழைத்திருப்பார்கள்
போதும் இந்த வாழ்க்கை என்று
புறப்படவும் நினைப்பார்கள்
மனதில் ஒரு தைரியத்துடன்



தெரிந்த இடம்
புரிகின்ற மொழி
பயமே இல்லாமல் சொல்வார்கள்
செட் ஆகவிடின் மீண்டும் 2 வருடம்
இவ்வாறே தொடர்கிறது
பயமில்லை இப்போது