Tuesday, March 29, 2011

சேவைக்கு நன்றி

சமுக வளர்ச்சிக்காய்
சற்றும் சலிப்பே இன்றி
சஹாக்களையும் சேர்த்து
சங்கம் அமைத்து
சேவை செய்யும் இளைஞ்சனே

வீணாய் போனவர்கள் மத்தியில்
விலை மதிப்பற்ற சொத்தாய்
விரலுக்கேற்ற வீக்கம் எடுக்கும்
வீரர்களே வாழ்த்துக்கள்

சங்கங்கள் பல இருந்தும்
இங்கு
சண்டை இல்லை... சச்சரவில்லை.....
போட்டி இல்லை.... பொறமை இல்லை......
படிப்பினை உண்டு மத இயக்கங்களுக்கு
இதுதான் பலன் எதிர்பாரத கூட்டம்

இணைந்த உள்ளங்கள்
இயன்ற அளவு இயங்குவதை
தட்டி கொடுத்து உதவுங்கள்
அல்லது
உபத்திரவம் செய்யாமலாவது இருங்கள்

சமுகம் அது விரிந்தது
கிளைகள் பல கொண்டது
சேவைகள் சில கண்டது
இளைஞ்சனாலையே இது நடந்தது
நன்றி

Friday, March 4, 2011

நான் அங்கில்லை.............

பாடசலையில் பிரச்சனை நடந்தது
காவல் நிலையம் வரை போனது
கவலையாக இருந்தது
கோவமும் வந்தது
ஒன்றும் பன்ன முடியவில்லை எனக்கு
நான் அங்கில்லை

சேவைகள் நடக்குது
சந்தோசமா இருக்குது
FACEBOOK ல தெரியுது
கமெண்ட்ஸ் மட்டும் முடியுது எனக்கு
நான் அங்கில்லை

நண்பர்களின் வலீமா நக்கிறது
அழைப்பும் தவறாமல் கிடைக்கிறது
சொல்லத்தான் கவலையாய் இருக்கிறது
கலந்துகொள்ள முடியாமல் போகிறது எனக்கு
நான் அங்கில்லை

மலை வெள்ளம் வந்தது
மனதெல்லாம் வெந்தது
பொருளெல்லாம் சென்றது
பர்ப்பதட்கேனும் நசீபு இல்லாமல் போனது எனக்கு
நான் அங்கில்லை

ஊரார் உயிர் பிரிகிறது
உறவுகளும் சுகவீனம் அடைகிறது
கேட்கத்தான் முடிகிறது
அருகிலிருந்து அரவணைக்க இயலாது எனக்கு
நான் அங்கில்லை

ஊரிலே கல்யாணம் நடந்தது
உறவுகள் ஒன்று சேர்ந்தது
கலகலப்பாய் இருந்தது
கவலையை போனது எனக்கு
நான் அங்கில்லை

ஓடி போவதாக தெரிஞ்சாச்சி
ஓடி போய் தடுத்தாச்சி
கண்ணியமாய் கல்யாணம் நடந்தாச்சி
பங்களிப்பே இல்லாம போச்சி எனக்கு
நான் அங்கில்லை

இன்னும் இருக்குது
சொல்லத்தான் நினைக்குது
கவலையே தடுக்குது
கண்ணீரே நனைக்குது